Saturday, 15 December 2012

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு'




ஆசான் வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார் என்பார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆகையால
்தான் அவரை உலகினுக்கே தந்து, தமிழ்நாடு வான்புகழ் கொண்டது.

ஜெர்மனியிலும் பின்பு ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்ததாகவும் உள்ள அல்சேஸ் எனும் பகுதியில் பிறந்து, முன்னேறிய ஐரோப்பிய நாகரிகத்தின் பின்னணியில் வளர்ந்து, மெய்யறிவு, இசை, மதயியல் ஆகியவற்றில் மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, கல்லூரிப் பேராசிரியராகவும், இசை, விற்பன்னராகவும் வசதியாக அமைந்த வாழ்வைத் தொண்டுள்ளம் காரணமாகத் துறந்து, நவீன வசதி எதுவுமின்றி வாழ்ந்த ஆஃபிரிக்க மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபடுவதற்காக 30 வயதுக்கு மேல் மருத்துவம் படிக்கத்தொடங்கி, ஏழு ஆண்டுகளில் மருத்துவராகி, பின் மணவாழ்வை மேற்கொண்டு, கறுப்பின மக்களோடு வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, உயிர் அன்பு (Reverence for life) எனும் கொள்-கையைப் போற்றி வாழ்ந்த, நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர் (1875-1965), குறளைப்பற்றிக் கூறும்பொழுது, அதன் அறநெறிகளில் நாம் காணும் உயர்ந்த பேரறிவு உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கின்றது என்கிறார். 1935இல் அவர் எழுதிய Indian Thought and its Development எனும் நூலில் இன்னும் பலவாறு வள்ளுவத்தைப் போற்றுகிறார்.

வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

No comments:

Post a Comment

Thank You...