Friday, 11 January 2013

மின்னஞ்சலாக மாறிய வாழ்த்துக்கள்..!

கால ஓட்டத்தில் காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்..!

சிறுவயதில் வீட்டுக்கு கடிதம் வருகிறதோ இல்லையோ, பொங்கல் திருவிழாவின் போது நண்பர்களின் வாழ்த்து அட்டை வரும். நாங்களும் எனது நெருங்கிய நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் பெட்டிக்கடையில் வாங்கி ஊர் நடுவில் ஆலமரத்தில் தொங்கும் தபால் பெட்டியில் போடும் போது தான் எத்தனை மகிழ்ச்சி.

இன்று ஆயிரம் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு மேயில் தட்டினால் எல்லோருக்கும் போய்விடும். ஆனால், இதை விட அன்று ஒவ்வொரு நண்பனான அவன் பெயரையும் ஊர்ப்பெயரையும் எழுதும் போது அவனும் அவன் ஊரும் குடும்பமும் மனதில் ஒளிக்கும்..

பள்ளிகளில் பொங்கல் சமயத்தில் தபால் பெட்டி ஒன்றை தற்காலிகமாக நிறுவி நண்பர்களுக்கு வார்த்து அட்டை அனுப்ப சொல்வார்கள். நாம் நிறைய நண்பர்களுக்கு அனுப்பினாலும், நமக்கு ஒன்னு ரெண்டு வாழ்த்து தான் வரும். நம் பெயருக்கு நிறைய வரவேண்டும் என்று 10 அட்டைகளில் என் பெயரையே எழுதி எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு என்று 6 ம் வகுப்பிலேயே செய்த அலப்பறைகள் எல்லாம்... இந்த பொங்கல் வாழ்த்து அட்டையால்... கொசுவர்த்தியாக சுற்றுகிறது.

நன்றி:Sathish Sangkavi

Via: @[100297810111159:274:சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?]

FOR MORE FUN VISIT US @ http://osmeb.blogspot.in/

No comments:

Post a Comment

Thank You...