என்ன ஏது என்று புரியாவிட்டால், அதை எதிர்த்து போராடுவது
அழுக்கு தெரியாமல் இருக்க கறுப்பு சட்டை அணிவது
தெரு முனைகளில் கூட்டம் போட்டு அசிங்கமாக பேசுவது
பிடிக்காதவர்களை நடுதெருவில் வைத்து செருப்பு விளக்கமாறு காட்டுவது
கடவுள் இல்லை என்று சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவது
அதே சாமி சிலைக்கு பூஜை செய்ய உரிமை கேட்பது
பறவைகளின் கக்கூஸை பகுத்தறிவு சிலை என்பது
வருடம் ஒருமுறை அந்த கக்கூஸுக்கு மாலை போடுவது
அந்த கக்கூஸை வணங்குவது
இவர்கள் மட்டுமே அதை கழுவ உரிமை வேண்டுவது
சண்டைக்கு வராதவர்களிடம் வெட்டி வீரத்தை காட்டுவது
குல்லா போட்டவர்களுக்கு சலாம் போடுவது
வசை வார்த்தைகளை கொண்டு புத்தகம் எழுதுவது
கோவணத்தில் கடவுள் இருக்கிறாரா என்று தேடுவது
ஈழத்தை பற்றி இந்தியாவில் பேசுவது
கறுப்பு வெள்ளையில் போஸ்டர் அடிப்பது
கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட்டு வெற்றி என்பது
அடிக்கடி தீக்குளித்து உயிருடன் இருப்பது
நிற்க்கும் ரயிலின் முன் பாய்ந்து வீரம் காட்டுவது
தமிழ்நாட்டு கற்பை காப்பாற்றுவது
கற்பை காப்பாற்ற வேட்டியை தூக்குவது
தூக்கிய வேட்டியுடன் போய் சினிமா நடிகையை மிரட்டுவது
பகுத்தறிவுள்ள மெகா சீரியலுக்கு விளக்கு பிடிப்பது
கற்பை போற்றி பாதுகாக்கும் டிவிக்கு குடை பிடிப்பது
ரோடு போடும் தாரை சுவற்றில் அடிப்பது
இவர்களின் பேச்சை கேட்பவர்களையும் வெங்காயமென்பது
மொத்தத்தில் பெரியாரின் பேரை கெடுத்து அவர் மீதான் மதிப்பை உடைத்து குட்டிசுவராக்குவது - பகுத்தறிவு
சாமி இல்லைன்னு சொல்லுறியா. சரி இல்லைன்னு வச்சிக்கோ. எதுக்கு செருப்பு மாலை போட்டு உன் கீழ்தர புத்தியை காட்டுற. மனசு எப்படியோ அது தான் வெளியவும் வரும். காசு மாலை போடுறவன் பணக்காரன். பூமாலை போடுறவன் மரியாதையானவன். செருப்பு மாலை போடுறவன் செருப்புக்கு சமானம் தான்.
வேதம் புராணம் எல்லாம் பொய். எல்லாம் கதை. இருந்துட்டு போகுது. நீ படிக்காதே. உனக்கு புரியாட்டி அதை போட்டு ஏன் எரிக்கிறே? அடுத்தவனுக்கு புரியுதேன்னு உனக்கு ஏன் வயிறு எரியுது? வேதம் படிச்சவன் அவன் வேலையை பார்த்துட்டி போனா, நீ ஏன் அவன் பின்னாடி வேட்டியை தூக்கிட்டு போற? உனக்கு வேலை இல்லையா
சிலையை கழுவி சந்தனம் பூசினா தப்பா?. தப்பு தான். பகுத்தறிவோட செருப்பு மாலை போட்டு சாணியை பூசி இருந்தா மனுஷ குணம்னு சொல்லி இருப்பாங்க. பாவம் மரியாதை செய்ய தெரியாம சந்தனம் பூசிட்டாங்க.
No comments:
Post a Comment
Thank You...