Monday, 23 July 2012

நீங்களும் மேடைப்பேச்சாளராகலாம்.

மேடைப்பேச்சுக்கு முதலில் தேவையானது மேடை என்ற புரிதலே நல்ல மேடைப்பேச்சாளனுக்கு இன்றியமையாதது. ஆகவே எப்போதும் எந்த மேடைக்கும் ஏறிச்செல்வதற்கான யத்தனிப்புடன் இருப்பவராகவே மேடைப்பேச்சாளர் இருக்கவேண்டும். மேடைக்குமுன்னால் மனிதர்கள் இருக்கவேண்டியதில்லை. ஆகவே குட்டி அரசியல்கட்சிகளின் தெருமுனைக்கூட்டங்கள் தொழிற்சங்க உள்ளறைக் கூட்டங்கள் கரகாட்டம் தொடங்குவதற்கு முன்புள்ள ஒலிப்பெருக்கி ரீ….ங்கிடும் மதச்சொற்பொழிவுகள் எதையும் ஒரு பேச்சாளன் தவிர்த்துவிடக்கூடாது. எந்த கலையும் அக்கலைஞனுடைய ஆத்மநிறைவுக்காகவே நிகழ்த்தப்படுகிறது. மேடைப்பேச்சு ஒரு கலை. கலை கலைக்காகவே.
மேடைப்பேச்சை பயிலத்தொடங்குவதற்கான சில ஆரம்பகட்டங்கள் உண்டு. பிறமேடைப்பேச்சுகளுக்குக் கேள்வியாளர்களாகச் செல்வதும் அம்மேடைப்பேச்சு முடிந்ததும் எழுந்து உடல்படபடக்க குரல் தழுதழுக்க முகம் வியர்க்க ”இப்ப நான் கேக்கிறது, அதாவது நீங்க பேசினதுலே நான் என்ன கேக்கறேன்னாக்க, ஆக்சுவலி இந்துமாதிரி ஒரு விசயத்திலே நான் கேக்கவாறது…பட்…”என்ற வகையில் வினாக்களைத்தொடுப்பது.
பழகுநருக்காக கீழ்க்கண்ட குறிப்புகள். நவீன இலக்கியவாதி என்றால் ”கலை கலைக்காகவா இல்ல மக்களுக்காகவா?”. முற்போக்கு மேடையில் ”இந்த விஷயத்திலே தொழிலாளியோட நெலைபாடு என்னவா இருக்கணும் தோழர்…” தமிழியக்கக் கூட்டத்தில்”இனமானப்பகைவர்களை வேரறுக்கிறதுக்கு மொழியை கருவியா பயன்படுத்தறதைப்பத்தி என்ன நெனைக்கிறீங்க?” — இம்மாதிரி கேட்கலாம். இவை கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வருபவையாதலால் அவர்களுக்குப் பதில்சொல்வதிலும் பெரிய சிக்கல் இராது. இதைவிட எளியவழி அவர்கள் பேசியவற்றில் ஒரு சொற்றொடரையே கேள்வியாக மாற்றி அவர்களிடமே கேட்பது. அதற்கு பின்னால் அவர்கள் சொல்லிய வரிகளை பதிலாகச் சொல்வார்கள். இருசாராருக்கும் திருப்தி
நம் குரலை நாமே கேட்க ஆரம்பிக்கும்போது ஏற்படும் பரவசமே மேடைப்பேச்சாளனை உருவாக்கும் அடிப்படை. அதன்பின்பு அடுத்த கட்டத்துக்குச் சென்று ஒரு கேள்வியை இருபது நிமிடங்களுக்கு தயாரித்துக்கொள்ளலாம். அதை எந்த மேடையிலும் எந்த பேச்சாளரும் பேசி முடித்தபின்னர் எழுந்து கேட்கலாம். ‘லூயிபுனுவலும் நிஜின்ஸ்கியும்’ என்ற கூட்டத்திற்குச் சென்று கலையழகனின் கவித்திறனைப்பற்றி கேள்வி கேட்பது தமிழ்நாட்டில் அனுமதிப்பட்டிருக்கின்றது. கேள்வி பத்து நிமிடங்களுக்குமேலே செல்லும்போது ”விஷயத்துக்கு வாங்க” என்ற மன்றாடல் நிமிடத்துக்கொருமுறை ஒலிப்பதை அஞ்சாது புறக்கணித்தல் வேண்டும்.
இந்தக்கட்டத்தில்தான் குஞ்சு கோழியாவது போல பேச்சாளர் ‘கூவி தெளிகிறார்’. அதற்கான பயிற்சிகளில் முதன்மையானது நேரம்காட்டும் குரலைப்புறக்கணிப்பது. நாமே மின்னணுக்கருவி ஒன்றில் மெல்லிய குரலில் ”நேரமாச்சு, முடிச்சிடுங்க” என்று ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஒலிப்பதுபோல அமைத்து வைத்துவிட்டு அதனால் சற்றும் பாதிக்கப்படாமலிருக்கும்படியாக நம் பேச்சுமுறையை பயிற்சி செய்துகொள்வது நல்லது.
”சொல்வலான் சோர்விலன் அவனை இருக்க வைத்தல் யார்க்கும் அரிது” என்ற மூதாதைக்கூற்று இருப்பதனால் நாம் ஒருபோதும் பேச்சில் சோர்வுறலாகாது. சோர்வு நம் முன் விதிவலியால் வந்து அமர்ந்திருக்கும் கேள்வியாளர்களுக்கு மட்டுமேயயுரியதென்க. ‘எதுவரை போகுமோ அதுவரை போகலாம்’ என்ற கவியரசின் வரியே நமக்கு வழிகாட்டியாம். ஆயினும் பேச்சுக்கு முன்னர் நம் கைக்கடிகாரத்தைக் கழற்றி நிலைமேஜைக்குமேல் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை மூத்த பேச்சாளர்கள் செய்வதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர்கள் நிறுத்தக்கடிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். பேசி முடித்தபின் வந்தமர்ந்து அவர்கள் அதை ஓடவிடுவதைக் காணலாம்.
நல்ல பேச்சாளன் தன் பேச்சை மூன்றாக பகுத்துக்கொள்ள வேண்டும். முதல்பகுதியில் தான் பேசப்போவதென்ன என்று சொல்ல வேண்டும்.அடுத்த பகுதியில் தன் பேச்சை நிகழ்த்த வேண்டும். கடைசிப்பகுதியில் பேசியதென்ன என்று சொல்ல முற்படவேண்டும். பேச்சை ஒன்றோடு இரண்டு என்ற மரபுமுறைப்படி கரித்தாள் வைத்து பிரதியெடுத்து மூன்றையும் சேர்த்துவைத்து மனப்பாடம்செய்து பேசிப்பழகுதல் நல்லது.
மேடைப்பேச்சாளனுக்குச் சில விதிகள் உள்ளன. ஒருபோதும்  அவன் எதையும் சொல்லவோ கேட்கவோ கூடாது. சொல்லிக்கொள்ளவும் கேட்கவும் ஆசைப்பட மட்டுமே வேண்டும். அச்சு ஊடகத்தில் முக்கால்குறிகள் அரைக்குறிகள் கால்குறிகள் உள்ளது போல மேடைப்பேச்சிலும் உண்டு, அவை சொற்கள் வடிவில் உள்ளன. ‘ஆகவே நான் சொல்ல வருவதென்னவென்றால்’ என்பது முக்கால்முறி. முக்கால்பங்கு பேச்சு மிஞ்சியிருக்கிறதென்றாலும் இது பேச்சு முடியக்கூடுமெந்ற நப்பாசையை கேள்வியாளர் மனதில் உருவாக்கி கூட்டம் கலைவதைத் தடுக்கும்.இன்னும்பலர் பேசஇருப்பதனால் நான் விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாக சொல்லி முடிக்க விரும்புகிறேன்’ என்பது அரைப்புள்ளி. ”என்னுடைய கருத்து என்னவென்றால்” போன்ற சொற்றொடர்கள் கால்புள்ளி.
‘இன்றையதினம்’ ‘அதேசமயம்’ போன்ற சொற்களுக்கு மேடைப்பேச்சில் பொருள் இல்லை என்றறிக. அவை கணிப்பொறித் தட்டச்சில் இடைவெளிப்பித்தான் போன்றவை.”எல்லா சொல்லும் பொருளுடைத்தற்றே”என்ற தொல்காப்பியச் சூத்திரம் இதையே குறிப்பிடுகிறது. மேடையில் பேசப்படும்போது எல்லா சொற்களும் மெல்லமெல்ல தங்கள் பொருள்களை உடைத்து எறிந்துவிட்டு விடைபெறுகின்றன. அந்நிலையில் எந்தச் சொல்லும் எதையும் குறிக்கும். புரட்சிவெடிக்கும் என்ற சொற்றொடர் சாயங்காலம் வீட்டுக்குச் செல்வோம் என்ற பொருள் தரலாம். கொலைவாளினை எடடா என்ற சொறொடர் தாராளமாக நிதிவழங்குங்கள் என்ற பொருள்பெறலாம்.
பேச்சாளருக்கு மனைவி மிக முக்கியம். அவளை வைத்தே அவர் நகைச்சுவை விருந்து படைக்க முடியும். நடுவர் அல்லது தலைவர் வெண்பல் காட்டி நகைத்து ”இன்னிக்கு வீட்டிலே பூரிக்கட்டைதான்…ஹ¥ம்”என்று தலையாட்டும்போது ”தலைவரவர்களே நாங்கள் அதற்காகவே ஹெல்மெட் வைத்திருக்கிறோம்” என்று சொல்லி மெல்ல குரல் தாழ்த்தி ”ஹெல்மெட் ஹெல்மெட்” என்று சொன்னால் அரங்கு அதிராதா என்ன? மேடையில் அச்சுத்தமிழ் பேசி நாக்கு களைத்துவிடும்போது கிராமத்தமிழுக்கு மாறி ”எங்கூட்டுக்காரி இருககளே அவ, என்னத்த சொல்றது போங்க…”என்று சற்றே இளைப்பாறலாம்.
மேடைப்பேச்சில் நிலைபாடு எடுப்பது அவசியம். நீங்கள் யார்? புரட்சியா? அப்படியானால் ஒலிப்பெருக்கிக்கு உங்கள் இடத்தோளைக் காட்டி பக்கவாட்டில் திரும்பி நில்லுங்கள். வாத்தை பிடிப்பது போல ஒலிப்பெருக்கியின் கழுத்தைப்பிடியுங்கள். பேச்சு சூடுபிடிக்க பிடிக்க மாறி மாறி இரு தோள்களையும் ஒலிப்பெருக்கிக்குக் காட்டுவது கலையழகூட்டும். நீங்கள் நகைச்சுவைப்பேச்சாளரானால் மைக்கை கிட்டத்தட்ட விழுங்குபவர் போல நெருங்கிவிடுங்கள். உங்கள் முக்கல் முனகல்கள் மேடைக்கு முக்கியம். அறிவுஜீவிப்பேச்சு என்றால் நிலைமேடையில் இரு கைகளையும் மடித்து ஊன்றிக்கொள்ளலாம். இது தொடைநடுக்கத்தைக் குறைப்பதோடு தொப்பை மற்றும் கூனையும்  மறைக்கும். நிலைமேடை இல்லாதபோது அறிவுஜீவிப்பேச்சாளர்கள் காற்சட்டைப்பைக்குள் கைகளைப்போட்டுக்கொள்வது நன்று.கைநடுக்கம் மறையும். பக்திப்பேச்சு என்றால் அமர்ந்துகொள்ளலாம்.  சப்பணமிட்டு அமர்ந்தால் மரபுத்¦தொடர்ச்சி ஏற்படுகிறது. பத்மாசனம் என்றால் நீங்கள் ஞானகுரு.
எந்நிலையிலும் மேடைப்பேச்சு சாதாரண தொண்டையில் அமையலாகாது என்று அறிக. ‘சாம்பார் கொண்டுவா’ என்று சொல்வதுபோல ‘எழுந்திரடா இளஞ்சிங்கம்!’ என்று சொல்ல முடியாதல்லவா? அடித்தொண்டை நன்று. சிம்மக்குரலுக்கு தனி குரல்வளம் தேவை. உறுமல் கர்ஜனை பிளிறல் முழங்குதல் மட்டுமே பேச்சு. பேசுதல் பேச்சல்ல. பெரும்பேச்சாளர்களை அவர்களுக்கே உரித்தான சைகைகள் மற்றும் அடையாளங்கள் மூலமே அறியப்படுகிறார்கள். ஆண்கள் முறுக்கு மீசை, பட்டைமீசை, தோள் துண்டு, வண்ண சால்வைகள் ,சல்வார்- கமீஸ், சுடிதார் போன்றவற்றை நாடலாம். பெண்கள் ஜிப்பா, ஜீன்ஸ் அணிவது சிறப்பு. மீசைகூட வைக்கலாம். சுட்டிக்காட்டுவது வெட்டிக்காட்டுவது ஓட்டிக்காட்டுவது போன்ற கையசைவுகளும் துண்டை இழுத்துவிட்டுக்கொள்ளுதல் சட்டைக்கையை மடித்துக்கொள்ளுதல் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுதல் மீசைமுறுக்குதல் போன்றவையும் பேச்சுக்கு வலுக்கூடுபவை. நழுவும் பாண்டை இழுத்து மேலே விடுதல் அவ்வாறல்ல.
‘சுற்றிவளைப்பது’ ‘அடுக்கிச் சொல்லுவது’ போன்றவை நல்ல பேச்சுக்கு அழகு. நல்ல அகராதியை வாங்கி ஒரே போல ஒலிக்கும் சொற்களைக் குறித்துக்கொண்டு அவற்றை நன்றாக மனப்பாடம்செய்து கொண்டால் சொல் சிறக்கும். அடுத்த வரி அகப்படும் வரை அதே வரியில் மேயாத மானாக நின்றுலாவ முடியும்.’முந்திரிப் பருப்பிருக்கிறது. அதிலே சிறப்பிருக்கிறது. நல்ல கொழுப்பிருக்கிறது. சற்றே இனிப்பிருக்கிறது. தின்னும் விருப்பிக்கிறது’ என்று சென்றுகொண்டே இருக்கலாம்.
சொல்ல வந்த கருத்துக்குச் சுற்றும் கும்மியடித்தல் ஒரு கலை. ”இன்றைய தினம் இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன? நம்மையெல்லாம் வாட்டிக்கொண்டிருப்பது என்ன? தாய்மார்களை கண்ணிர்விடவைப்பது என்ன? அவர்களின் குழந்தைகளை இழுவாச்சியடிக்க வைப்பது என்ன? நாட்டிலுள்ள நல்லோர் அஞ்சி நடுங்குவது என்ன? நாமெல்லாம் இங்கே பேசக்கூடியிருப்பது என்ன?” என்று சொல்லிச்சென்றால் யாதும் ஊரே, எதுவும் உரையே.
எதுகை மோனையை நம்பினோர் எதற்கும் அஞ்சார். நாம் விரும்புவது டிவி. அதிலே அழைப்பார் கூவி. பார்த்து அழுவோம் கேவி. அதைத்தடுப்பார் சில பாவி. அவர்கள்ளுக்கு வைக்கவேண்டும் ஆவி — என்று சொல்லிக்கொண்டே செல்லலாம். இரட்டுற மொழிதலும் விரும்பபபடும். மேடையில் அறிவு நடமாடுவதற்கான சான்றாகவும் அத்திறன் அமையும்.’நிலக்கடலை பயிரிட்ட வயல். அலையலையாய் கண்டேன் நிலக்கடலை!’ என்றொரு எடுப்பெடுத்தால் தலைவர் ”நீங்க தின்னது உப்புக்கடலை”என்று சொல்லி அவையை குதூகலிக்கச் செய்ய ஏதுவாகும். இரட்டுற மொழிதலில் கௌரவமிருப்பது நன்று. கௌரவம் இழக்கத்துணிந்தால் எதுவும் இரண்டுபொருள் கொள்ளும். ”திங்கக்கிழம போயிருந்தேன்’ என்று கோணலுதடுகொண்டு சொல்லி ஒரு இழுப்பிழுத்தால் தெருமுனை கேள்வியாளர் இறும்பூது எய்துவர்.
கைதட்டல் இல்லையேல் மேடைப்பேச்சு இல்லையென்றறிக. கைகள் ஒருபோதும் தானாகவே தட்டாதென்றறிந்தவனே மேடைப்பேச்சாளன். எங்கே கைகள் தட்டப்பட வேண்டுமென்பதை பேச்சாளர் பேச்சுமுறைமூலம் ஐயம்திரிபற அவைக்கு அறிவித்தாகவேண்டும். பேச்சு நடுவே சொன்ன வரியை வேறு தொனியில் மீண்டும் சொல்லி இடைவெளி விடுதல். ஒரு சொற்றொடரை உரக்கச் சொல்லி அவையோரை சிம்மபாவனையில் பார்த்தல். கைகளை தூக்கி ஆணித்தரமாக உரைத்தல். சட்டென்று குரலை குறைத்தோ இழுத்தோ ஒன்றை உரைத்தல் என அதற்கான அடையாளங்கள் பல. எங்கே கைதட்ட வேண்டுமென நாம் பார்வையாளருக்கு உணர்த்திவிட்டால் தமிழக மக்கள் தட்டாமல் விடாரென்பதை நம்புக.
கடைசியாக, நல்ல மேடைப்பேச்சு என்பது கேட்டு முடித்தகணம் கேள்வியாளருக்கு ஏராளமாகக் கேட்டுவிட்ட எண்ணத்தை உருவாக்கும்போதே மறுநாள் முழுமையாக அவர் மனதிலிருந்து மறைந்துவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாள்தோறும் எப்படி பேச்சாளர் பேசமுடியும்? நல்ல பேச்சும் சங்கீதமும் ஒன்று. இரண்டிலும் ஒரேவரியை ஓராயிரம் முறை நிரவல்செய்யலாம்.

Saturday, 21 July 2012

 பொழுதை போக்க நினைத்தால் போகாது ....
 ஆக்க நினைத்து  பார்  பத்தாது
                                                         - அலெக்ஸ்

கவி

இதயங்களை தொடும்
கவி ஒன்று சொல் என்று
நீ என்னிடம் கேட்காதே!....

சிறு சிறு சிமிட்டளுக்குள்
உன் கண் இமைகள் சொல்லும்
கவிதையை விட .....
அப்படி என்ன ஒரு கவிதை
நான் சொல்லிவிடப்போகிறேன்!......

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.
 புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் 
 
சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

Sweet Memories