Saturday, 21 July 2012

சொல்லிடாத காதலை


சொல்லிடாத காதலை
சொல்வதற்காக
சொல்லும் வார்த்தைகளை
சொல்லிபார்த்தேன் !

காதலை சொல்லி
சொன்ன காதலுக்கு
அவள் என்ன சொல்லபோகிறாள் என்று
மனதில் சொல்லிபார்த்தேன்

அவளிதழ் சொல்லபோகும் வார்த்தைகள்
அழகாகத்தான் இருந்தது!

அவள் சொல்லபோகும் காதலுக்காக
அவள் சொல்லாமலேயே காத்திருந்தேன்
அவள் சொல்லவரும் வார்த்தைகள் எல்லாம்
அவள் சொல்லாமலேயே
அவள்விழிகள் சொன்னது !

விழிகள் பகிர்ந்துகொண்ட காதலை
என்இதயம் மெளனமாக ரசித்தது !
மௌனமாகவே இருஇதழும்
இணைந்துகொண்டது !! ♥ ♥ ♥

No comments:

Post a Comment

Thank You...