தமிழ் மட்டுமே தெரிந்தால் சாக வேண்டியது தவிர வேறு வழியில்லை
தமிழ்
மட்டுமே தெரிந்தால் சாக வேண்டியது தவிர வேறு வழியில்லை என்பதை காட்டும்
குறும்படம். மொழி என்பது அறிவை வளர்பதற்கு தான் பயன்பட வேண்டுமே தவிர உயிரை
எடுப்பதற்கு அல்ல என்று இந்த குறும்படத்தில் காட்டியுள்ளனர் .
ஆங்கிலம் தெரிந்தால் தான் அறிவு , பெருமை என்ற இழி நிலைக்கு தமிழர்களை
திட்டமிட்டே தள்ளிவிட்டனர் ஆட்சியாளர்கள். ஆங்கிலம் இங்கிலாந்தில்
தெரியவில்லை என்றால் வெட்கப் படலாம். தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரியவில்லை,
தமிழ் தான் தெரியும் என்று சொல்வதில் என்ன வெட்கம் இருக்கிறது. இதில்
பெருமை தானே பட வேண்டும். தமிழை முறையாக பேசத் தெரிந்தவர்கள் குறைந்து
வரும் இந்தக் காலத்தில் தூய தமிழில் உரையாடுவதை நாம் பெருமையாக கொள்வோம்.
வேற்று மொழியில் உரையாடுவதை அவமானமாக கருதுவோம். இந்த நிலையை நாம் தான்
உருவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment
Thank You...