Sunday, 7 October 2012

திராவிட மொழிக் குடும்பம் .

உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி மண்டரின் (சீன மொழி)
மேலும் , சீன மொழியானது பல வகைகளாகப் பேசப்பட்டாலும் அம்மொழிகள் அனைத்திற்கும் எழுத்துருவம் ஒன்றே !
அதேபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்மொழியும் பல வகைகளாகப் பிரிந்து போனது ,
அதைதான் திராவிட மொழிகள் என்று கூறுவார்கள் ,
திராவிட மொழியானது ஆதியில் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழிகளே ஆகும் ,
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தமிழும் ஆதி தமிழில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக் கண்டதே ஆகும் .
ஆதி தமிழ்மொழியில் இர...
ுந்து பிறந்த மொழிகளில் ஒன்றுதான் மலையாளம் ,
மலையாள மொழியை ஆரம்பத்தில் மணிப்பிரவள மொழி என்று அழைத்தனர் ,
மணி என்ற தமிழ் சொல்லும் பிரவளம் என்னும் வடச்சொல்லும் ,
மலையாள மொழி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு மொழி என்று குறிக்கிறது .
உண்மையில் சேர நாட்டில் பேசப்பட்ட தமிழைத் தான் மலை நாட்டு தமிழ் என்று அழைத்தனர் ,
இம்மொழியானது வடமொழியினால் அதிக அளவு தாக்கப்பட்டு ஒரு தனி மொழியாகத் திரிந்தது ,
ஆய்வுகள் மலையாளத்தில் 80க்கும் அதிகமான சதவீத வடமொழி கலப்பு இருப்பதாகக் கூறுகின்றன .
மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மொழியாக அறிவிக்கப்பட்டது .
கிரந்த எழுத்துகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தன் மொழிக்கு ஓர் எழுத்துவடிவம் உருவாக்கி ,
தமிழில் இருந்து பிரிந்து தற்பொழுது தனி ஒரு மொழியாக மலையாளம் திகழ்கிறது .

அதேபோல தமிழர்களின் வழக்கு தமிழ் (பேச்சுத் தமிழ்) , உரைநடை தமிழுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்ட தனி ஒரு மொழி போலத் தோன்றுகிறது.
எடுத்துகாட்டாக : நா போய்ட்டு வரேன் , நான் போய் வருகிறேன்/நான் சென்று வருகிறேன் .

மேலும் தமிழ்மொழி ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேசப்படுகிறது ,
அதுமட்டுமா ? தமிங்கிலம் (Tanglish) தான் தற்பொழுது மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது !
இந்த சூழ்நிலை இப்படியே தொடருமானல் தமிழிலிருந்து மலையாளம் போன்ற மொழிகள் பிரிந்தது போல ,
தமிழிலிருந்து இன்னொரு புது மொழி மீண்டும் பிறந்தாலும் பிறந்து விடும் .
நம் தமிழை நாம் தான் காக்க வேண்டும் ,
வேலியே பயிரை மேய்வது போல ,
நம் தமிழை நாமே சிதைக்கக் கூடாது ,
முடிந்தவரை தமிழை முறையாகப் பேசுவோம் ,
இளமை குன்றாத அழகு தமிழைப் போற்றுவோம் !!

# முடிந்தவரை தமிழை உரோமிய எழுத்துகளில் (Roman Letters) எழுதுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் .

தவறேதும் இருந்தால் திருத்தவும் . நன்றி .

கீழ்காணும் படம் :

No comments:

Post a Comment

Thank You...