Tuesday, 9 October 2012

இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லை

இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லை . எந்த கட்சியிலும்(குறிப்பாக ஆண்டு முடித்த கட்சி , ஆட்சியில் இருக்கும் கட்சி ) நீங்கள் கீழ்க்கண்ட பதவிகளிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கண்காணியுங்கள்.

பஞ்சாயத்து தலைவர்
ஒன்றிய கவுன்சிலர்
ஒன்றிய தலைவர்
...
நகராட்சி கவுன்சிலர்
நகராட்சி தலைவர்
மாநகாராட்சி கவுன்சிலர்
மாநகராட்சி தலைவர்
மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
சட்ட மன்ற உறுப்பினர்
பாராளுமன்ற உறுப்பினர்
அனைத்து கட்சி ஒன்றிய , மாவட்ட செயலாளர்கள்

பதவிக்கு வரும் முன் இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பதிந்து கொள்ளுங்கள். பதவியில் இருந்து இறங்குகையில் இவர்களின் சொகுசு வாழ்க்கையை பதியுங்கள்.

கிட்டத்தட்ட மொத்த எண்ணிக்கையில் ஒரு லக்ஷம் பேர்களாக இருக்கும் இந்த அனைவரும் அரசியலை வியாபாரமாக்கி குறைந்தது ஊழல் பணம் பத்து லக்ஷம் முதல் பத்து கோடி வரை பொது மக்களின் பணத்தை தின்கிறார்கள்.

நாம் கத்தி கத்தி நமது நேரத்தை விழுங்கி பலரை திட்டி சாடி கடும் விமர்சனம் வைத்தாலும் இந்த வியாபாரிகள் அனைவரும் அமுக்கடியாக அவர்களது ஊழல் வேலைகளை தொடர்கிறார்கள்.
இவர்களிர்காகவே அரசியல் இயக்கங்களும் இயங்குகிறது. பொது மக்களிற்கு , யானைஇடம் தப்பிய பொறிகளை போல சில பலதுகள் நடக்கிறது.

பொது சொத்தை விழுங்கும், இந்த பெரும் ஊழல் யானைகளை கண்காணிக்க எந்த அமைப்பும் சரியாக இல்லை.

No comments:

Post a Comment

Thank You...