Saturday, 18 August 2012



ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது.
உனக்கு பிடித்தமான
மண்வாசத்தில் நீயும்
எனக்கு பிடித்தமான
உன்வாசத்தில் நானும்....

ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
காதல்மழையில் நனைந்தபடி ....! ♥ ♥

how many likes for this bro/sis love :)

முழுவதும் படிக்கவும்



  • மண்ணுக்கு உசுர் இருக்கா?
    மண் என்பது ஜீவராசிகள் தங்கி வசிக்கும் உயிர்க்கூடு. கண்ணரியாத நுண்ணுயிர்களை - காளான் உயிரிகளை - மண்புழுக்களை - பாசி இனங்களை - பூச்சியின் கருமுட்டைகளை - ஒன்றுகூட்டி வைத்திருக்கும் உயிர் தொகுதிதான் மண். மண்ணுக்கு தனியாக ஆற்றல் ஏது? இந்த உயிர்தொகுதியின் உந்து சக்திதான் மண். கடப்பாரைக்கு உடையாத கரும்பாறை ஒரு தாவரத்தின் வேருக்கு நெக்குருகி நிற்கிறதே.... எப்படி? எல்லாம் பாக்டீரியாக்கள் படுத்தும்பாடு. பாறைகளை உடைக்கும் பாக்டீரியாக்கள் பழங்குப்பைகளை மக்கச்செய்யாதா? உலோகங்களையே கரைக்கும் அந்த உயிரணுக்கள் தாவரங்களின் வேர்களுக்கு தாய்ப்பால் ஊட்டாதா?. மண்ணை எது உயிரோடு வைத்திருக்கிறதோ அதைக் கொல்கிறீர்கள். ரசாயன உரம் தெளித்து, மண்ணைக் கொன்று விவசாயம் பார்க்கிறீர்கள். மண் என்பது ஜடமல்ல; அது ஒரு உயிரி. மனிதக் கொலையிலும் கொடியது மண் கொலை. - கவிப்பேரரசு. "மூன்றாம் உலகப்போர்" நூலில்.

    (நண்பர்கள் இந்த பதிவை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்)


மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.


Thursday, 16 August 2012


Golden Poison Frog (Phyllobates terribilis)

Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Amphibia
Order: Anura
Suborder: Neobatrachia
Family: Dendrobatidae
Genus: Phyllobates
Species: P. terribilis
Binomial name: Phyllobates terribilis

P. terribilis is a social animal, living in groups of up to six individuals; however, captive terribilis can live in much larger groups than that. Terribilis are often considered innocuous due to their small size and bright colours; however wild specimens are lethally toxic. This poison dart frog is confirmed to have killed humans who touched the wild frog.

The golden poison Frog's skin
is densely coated in alkaloid poison, one of a number of poisons common to dart frogs
(batrachotoxins ) which prevents nerves from transmitting impulses, leaving
the muscles in an inactive state of contraction. This can
lead to heart failure or fibrillation. Alkaloid batrachotoxins can be stored
by frogs for years after the
frog is deprived of a food-
based source, and such toxins
do not readily deteriorate,
even when transferred to another surface. Chickens and dogs have died from contact with a paper towel on which a frog had walked.

The golden poison frog is not venomous, but poisonous; venomous animals use their toxins to kill their prey. Like most poison dart frogs, P.terribilis uses poison only as a self-defense mechanism and not for killing prey. The most venomous animal is the box jellyfish , which is only slightly less toxic than P. terribilis.

The average dose carried will vary between locations, and consequent local diet, but the average wild P. terribilis is generally estimated to contain about one milligram of poison, enough to kill about 10,000 mice. This estimate will vary in turn, but most agree that this dose is enough to "kill between 10 and 20 humans",
which correlates to up to "two African bull elephants".
This is roughly 15,000 humans per
gram.

RaJa

தமிழ் மட்டுமே தெரிந்தால் சாக வேண்டியது தவிர வேறு வழியில்லை

தமிழ் மட்டுமே தெரிந்தால் சாக வேண்டியது தவிர வேறு வழியில்லை என்பதை காட்டும் குறும்படம். மொழி என்பது அறிவை வளர்பதற்கு தான் பயன்பட வேண்டுமே தவிர உயிரை எடுப்பதற்கு அல்ல என்று இந்த குறும்படத்தில் காட்டியுள்ளனர் .

ஆங்கிலம் தெரிந்தால் தான் அறிவு , பெருமை என்ற இழி நிலைக்கு தமிழர்களை திட்டமிட்டே தள்ளிவிட்டனர் ஆட்சியாளர்கள். ஆங்கிலம் இங்கிலாந்தில் தெரியவில்லை என்றால் வெட்கப் படலாம். தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரியவில்லை, தமிழ் தான் தெரியும் என்று சொல்வதில் என்ன வெட்கம் இருக்கிறது. இதில் பெருமை தானே பட வேண்டும். தமிழை முறையாக பேசத் தெரிந்தவர்கள் குறைந்து வரும் இந்தக் காலத்தில் தூய தமிழில் உரையாடுவதை நாம் பெருமையாக கொள்வோம். வேற்று மொழியில் உரையாடுவதை அவமானமாக கருதுவோம். இந்த நிலையை நாம் தான் உருவாக்க வேண்டும்.

இப்பதிவை ஷேர் செய்து விடவும் byVasanthakumar Graphicdesigner
சிறுவன் சிவசங்கரன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்:-(((

அன்பு நண்பர்களே சிறுவன் சிவசங்கரன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அடையாறு கேன்சர் மருத்துவமனை மருத்துவர்களே முடியாதென கைவிரித்து வீட்டுக்கு கூட்டி போங்கன்னு சொல்லிட்டாங்க, ஆனால் அந்த சிறுவனின் தாயும் நாமும் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இங்
கேயே சிகிச்சை தொடர கயல்விழி மூலம் பிரபல மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையிலேயே இருக்க சம்மதித்திருக்கிறார்கள் ஆனாலும் குணமடையும் வாய்ப்பு இல்லை என கைவிரித்து விட்டனர், அந்த தாயாரின் கண்ணீர் மிகவும் வேதனை தருகிறது, ஒரே மகனை வைத்திருக்கும் அந்த தாய்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லாமல் தவிக்கிறேன்.

யாரேனும் இந்த நோய்க்கு வேறு வகையில் சிகிச்சை அளித்து குணமளிக்க முடியும் என நம்பினால் அந்த சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறோம். நமது நண்பர்கள் தயவு செய்து இதற்கு மாற்று சிகிச்சை முறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும்.

இப்பதிவை ஷேர் செய்து விடுங்கள், உயிர்காக்கும் சேவையில் பங்கெடுங்கள் நண்பர்களே, இப்பதிவு அந்த தாயின் கண்ணீர் கொண்டு வரையப்படுகிறது..
.........இலவச  ஜோதிட பலன்.........

நண்பர்களே  உடனே 8220118617 என்ற  எண்ணுக்கு
உங்களுடைய பிறந்த  தேதி,  மாதம், வருடம் மற்றும் பிறந்த நேரத்தை SMS செய்யுங்கள்...இலவச  ஜோதிட பலனை SMS மூலம்  

உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !



கம்போடியாவில் உள்ள " அன்க்கோவர் வாட் " கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை , ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது ! 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது , இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !

Sunday, 5 August 2012

இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!



சாலையில் போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் அஸ்லம்: கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு வந்த போது, "என்ன செய்யலாம்...' என யோசித்தேன். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார் மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. ஆனால், இது எதுவுமே இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம் என நினைத்தேன்.

நான் படித்த மெக்கானிக்கல் படிப்பும், நண்பர்களும் உதவி செய்ய, கண்டுபிடிப்பில் இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப் பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான கார்ப்பெட் போன்று இருக்கும். பஸ் வரும் போது, அந்தக் கருவி, வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும். அதை, "ஆல்டர்னேட் டைனமோ' மின்சாரமாக மாற்றும். அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட் மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும், தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், மாசு இல்லை; எந்த எரிபொருளும் தேவை இல்லை; அணுமின் நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின் செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது. தமிழக அரசு இந்த செயல் திட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச் செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில், தமிழகத் திற்கு தேவையான, 12,500 மெகாவாட் மின் சாரத்தை தயாரிக்க முடியும்.