Wednesday 11 July 2012

இராஜராஜனுக்குப் பின் பொ.பி 1016ல் பட்டம் ஏறியவன் இராஜேந்திர சோழன். அவன் கங்கையும் கடாரமும் தன் கையகப்படுத்தியவன். இவன் இலங்கையையும் தன் ஆட்சிக்குள் உட்படுத்திக் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். இக்காலத்தில் இலங்கை ‘மும்முடிச் சோழமண்டலம்’ என்று அழைக்கப்பெற்றிருக்கிறது..

தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தை இவர்கள் பொலநறுவைக்கு மாற்றினர். புலத்திநகரே பொலநறுவையாயிற்று. இதற்கு சோழர்கள் வைத்த பெயர் ஜனநாதமங்கலம். இங்கும் பல சிவாலயங்கள் எழும்பின. இவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என்கிற கோயில் இன்று வரை சிறப்பாக உள்ளது. இக்காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் என்ற குடியிருப்புக்களும் அமைக்கப்பெற்றிருக்கின்றன.


உத்தமசோழீச்சரம்,பண்டித சோழீச்சரம் என்ற கோயில்களும் அமைக்கப்பட்டன

No comments:

Post a Comment

Thank You...