Saturday 18 August 2012

முழுவதும் படிக்கவும்



  • மண்ணுக்கு உசுர் இருக்கா?
    மண் என்பது ஜீவராசிகள் தங்கி வசிக்கும் உயிர்க்கூடு. கண்ணரியாத நுண்ணுயிர்களை - காளான் உயிரிகளை - மண்புழுக்களை - பாசி இனங்களை - பூச்சியின் கருமுட்டைகளை - ஒன்றுகூட்டி வைத்திருக்கும் உயிர் தொகுதிதான் மண். மண்ணுக்கு தனியாக ஆற்றல் ஏது? இந்த உயிர்தொகுதியின் உந்து சக்திதான் மண். கடப்பாரைக்கு உடையாத கரும்பாறை ஒரு தாவரத்தின் வேருக்கு நெக்குருகி நிற்கிறதே.... எப்படி? எல்லாம் பாக்டீரியாக்கள் படுத்தும்பாடு. பாறைகளை உடைக்கும் பாக்டீரியாக்கள் பழங்குப்பைகளை மக்கச்செய்யாதா? உலோகங்களையே கரைக்கும் அந்த உயிரணுக்கள் தாவரங்களின் வேர்களுக்கு தாய்ப்பால் ஊட்டாதா?. மண்ணை எது உயிரோடு வைத்திருக்கிறதோ அதைக் கொல்கிறீர்கள். ரசாயன உரம் தெளித்து, மண்ணைக் கொன்று விவசாயம் பார்க்கிறீர்கள். மண் என்பது ஜடமல்ல; அது ஒரு உயிரி. மனிதக் கொலையிலும் கொடியது மண் கொலை. - கவிப்பேரரசு. "மூன்றாம் உலகப்போர்" நூலில்.

    (நண்பர்கள் இந்த பதிவை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்)


No comments:

Post a Comment

Thank You...