Wednesday 27 June 2012

ஆஹா.. ஆ.ராசா ஆரம்பித்து விட்டார்: “உங்க பில்லில் ரூ210 மைனஸ் பண்ணியது யார்?”


சுப்ரீம் கோர்ட் முதல், சுப்ரமணியபுரம்வரை அடிபடும் ஒரு கூற்றை மறுத்திருக்கிறார், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. “2ஜி-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், லட்சக்கணக்கான கோடிகளில் பணம் கைமாறியது என்பதெல்லாம் கப்சா” என்று கூறியுள்ள ராசா, “இவர்கள் கூறும் விவகாரத்தில் 1 ரூபாகூட நஷ்டம் கிடையாது” என்றிருக்கிறார்.
சேவூரில் (திருப்பூர் மாவட்டம்) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 176,000 கோடியை நான் எடுத்துக் கொண்டேன் என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. அதற்காக, 15 மாதம் சிறை சென்று வந்துள்ளேன்” என்ற பிளாஷ்-பேக்குடன் துவங்கினார்.
“யோவ்.. மொதல்ல சரியா கணக்கு பாருங்கப்பு”
“சி.ஏ.ஜி. (Comptroller and Auditor General of India) கொடுத்த அறிக்கையில் ரூ.176,000 கோடி நஷ்டம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் ரூ. 33,000 கோடி நஷ்டம் என்று கூறியுள்ளனர். இவ்வழக்கில் எனக்காக நானே வாதாடி வருகிறேன். ஒரு ரூபாய்கூட நஷ்டம் இல்லை என்பதை நிரூபிப்பேன்” என்று கூறிய ராசா, இந்தப் பேச்சு சேவூருக்கு கொஞ்சம் டூ மச் என்று நினைத்தாரோ, என்னவோ, எளிமையான விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.
“ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாயாக இருந்த தொலைபேசிக் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்ததுதான், நான் செய்த தவறா? 30 கோடி பேர் மட்டுமே பயன்படுத்திய தொலைபேசி சேவையை 90 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் உயர்த்தியது குற்றமா? ரூ.310-ஆக இருந்த சராசரி தனிநபரின் மாத தொலைபேசிக் கட்டணத்தை ரூ.100 ஆகக் குறைக்க வைத்தது கெடுதலா?” என்றார் லோக்கல் டச்சுடன்.
ராசா ‘உள்ளே’ இருந்தபோது, தி.மு.க.-வினர் ஊர் ஊராக ‘ஸ்பெக்ட்ரம் விளக்க கூட்டங்கள்’ நடத்தினர். அதில் கூறப்பட்ட விளக்கத்தைவிட, சம்மந்தப்பட்ட நபரே விளக்கம் கொடுக்கும்போது, சுவாரசியமாகத்தான் உள்ளது!

No comments:

Post a Comment

Thank You...