Friday 22 June 2012

மூன்று (3): நடிகர் தனுஷூக்கு அடி! நாட்டின் ஜனாதிபதிக்கோ இடி!!



ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நியமிக்கும்போது, அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க.-வும் ஆரம்பத்தில் கூறிக்கொண்டன. அதன்பின், ஒவ்வொரு கூட்டணியும், ஒவ்வொரு வேட்பாளரை நிறுத்துவது என்ற பேச்சு அடிபட்டது.
நாட்டில் 3 கூட்டணிகள் பிரதானமாக உள்ளன. இப்போது இறுதிச் சுற்றில் இரு வேட்பாளர்களின் பெயர்களே உள்ளன. ஆனால், அட்லீஸ்ட் மூன்று கூட்டணிகளுக்கு உள்ளேகூடஒரு வேட்பாளரை ஆதரிப்பது என்ற நிலை ஏற்படவில்லை. மூன்று கூட்டணிகளுக்குள்ளும் குழப்பம்!
‘3’ இங்கேயும் ட்ரபிள்.. அங்கேயும் ட்ரபிள்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கூட்டணி ஆகியவையே நாட்டிலுள்ள பிரதான 3 கூட்டணிகள். இந்த மூன்றிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலானது. இவர்கள் அறிவித்துள்ள வேட்பாளர்தான், பிரணாப் முகர்ஜி.
இவரை, கூட்டணியிலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.க., சங்மாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
அந்தக் கூட்டணியிலுள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகள் பிரணாப்பை ஆதரிக்கும்படி ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்தன. நேற்று, சங்மாவை ஆதரிப்பதாக பா.ஜ.க. அறிவித்தபோது, அதை ஏற்றுக்கொள்ள ஐக்கிய ஜனதா தளம் மறுத்து விட்டது.
பிரணாப்பை ஆதரிப்பதாக சிவசேனா ஏற்கனவே அறிவித்து விட்டது.
மூன்றாவது அணியான கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டமும் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சும்மாவே கம்யூனிஸ்ட் இருக்கும் இடத்தில் குழப்பம் ஏற்படுவது சகஜம். அதுவும், வெவ்வேறு ‘திசை’ கம்யூனிஸ்டுகள் ஒரே இடத்தில் சேர்ந்தால், குழப்பத்துக்கு பஞ்சமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், பார்வர்டு பிளாக்கும் பிரணாப்பை ஆதரிக்க முடிவு செய்தன. இந்திய கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி. ஆகிய இரு கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தன.
மொத்தத்தில், ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் பிரச்னையில், நாட்டின் முக்கிய 3 கூட்டணிகள் இடையேயும் ஒத்த கருத்து இல்லை. 3 கூட்டணிகளுக்கு உள்ளேயும் ஒத்த கருத்து இல்லை.
3 என்ற டைட்டில் சினிமாவில்தான் சறுக்கியது என்றால், டில்லியிலும் அல்லவா சறுக்குகிறது! வொய் திஸ் கொலவெறி?

No comments:

Post a Comment

Thank You...