Saturday 16 June 2012

இந்தியா ஒரு நாள் சிதறப்போகிறது?


PDF அச்சிடுக மின்-அஞ்சல்
india-mapதத்துவ மேதை டார்வின் ஒருமுறை கேம்ப்ரிட்ஜ்  பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தார்.
அங்கே இருந்த சில குறும்புக்கார மாணவர்கள், இவரைச் சோதிக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள். நான்கைந்து பூச்சிகளின் உறுப்புகளை தனித்தனியாகப் பிரித்து, பின் அவற்றை ஒன்றாக சேர்த்து...
டார்வினிடம் எடுத்துச் சென்று காட்டி,
‘What kind of bug is this?’ என்றார்கள்.
அந்தப் பையன்களின் விஷமத்தனத்தைப் புரிந்துகொண்ட டார்வின்,
'Did it hum?’ என்று கேட்டார்.
மாணவர்களும், ‘Yes. it did’ என்றார்கள்.
டார்வின் சிரித்துக் கொண்டே,
‘Then certainly it is a hum-bug’ என்றார்.
தத்துவ மேதையை சோதிக்க வந்த மாணவர்கள் அசடு வழிய நின்றார்கள்!
இதை நான் படிக்க நேர்ந்தபோது எனக்கு இந்தியாவைப் பற்றிய நினைவுதான் வந்தது.
உண்மையில் இந்தியாவும் ஒரு ஹம்பக்தான்.'India is also a humbug’ என்று நினைத்து சிரித்துக் கொண்டேன்.
Darwin-11அய்ந்தாறு பூச்சிகளின் உறுப்புகளைப் பிரித்து எடுத்து, ஒன்று சேர்த்துக் கட்டி வைத்த பூச்சியைப் போன்றதுதான் இந்தியாவின் அமைப்பும். இந்தியா ஒரு செயற்கையான நாடு!
இது இயல்பில் ஒரு தேசமல்ல.
வெள்ளைக்காரன் ஆட்சி, அதிகார வசதிக்காக பல்வேறு தேசங்களை ஒன்றாக்கினான்.
வெள்ளைக்காரனை வெளியேற்றுவதற்காக இந்தியா என்னும் பல தேசக் கதம்பம் ஒன்றாய் நின்றது. அவன் ஒன்றாக்கியதற்கான காரணமும் முடிந்துபோனது. நாம் வெள்ளையனை வெளியேற்ற ஒன்றாக நின்றோம். அந்தக் காரணமும் முடிந்துபோனது.
உண்மையான தங்க நகைகளைக் காட்டிலும் பத்து நாட்களுக்கு பளபளக்கின்ற கவரிங் நகையைப் போல... இதுவரை இந்தியா ஒரு தேசமாக ஜொலித்து வருகிறது.
பூசிய தங்க முலாம் போய்விட்ட பின்னால்... இது பித்தளை என்று தன்னைக் காட்டிக் கொள்வதைப் போல... இந்தியா ஒன்றாய் இருப்பதற்கான இரண்டு காரணங்களும் முடிந்துபோன நிலையில்...
prabhakaran-_ltte-11இந்தியாவின் அசல் முகம் இப்போது மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அதற்கான சாட்சி...
அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்திருப்பதுதான்.
நான் ஒரு விலங்கை கற்பனை செய்து பார்த்தேன்.
கேம்ப்ரிட்ஜ் மாணவர்களைப் போல இந்தியா என்பது பல்வேறு விலங்குகளின் பல்வேறு உறுப்புகளை வெட்டி ஒட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
குரங்கின் முகம்...
யானையின் தும்பிக்கை...
சிங்கத்தின் பிடரி....
காளையின் திமில்...
மானின் கொம்பு....
வேங்கையின் வரிகள்...
கங்காருவின் வயிறு ..
ஒட்டகத்தின் முதுகு
நாயின் வால்...
பசுமாட்டின் தாடை...
ஒட்டகச் சிவிங்கியின் நீண்ட கழுத்து...
என்று இப்படி பல மிருகங்களின் உறுப்புகளை ஒன்றாக சேர்த்துப் பார்த்தேன்.
அதில் இந்தியாவின் உருவம்தான் எனக்குத் தெரிந்தது. இது கிண்டலுக்காகவோ கேலிக்காகவோ சொல்வதில்லை. உண்மை இதுதான். இந்தியா நேற்று இருக்கவில்லை...
இன்று இருக்கிறது...
நாளை இருக்கும், என்பதற்கான உறுதியான நம்பிக்கை இல்லை.
நீண்ட காலத்துக்கு ஒன்றாகவே இருக்கும் என்பது இயற்கையின்பால் பட்டதல்ல.
இந்தியா சுதந்தரம் பெற்ற தருணத்தில் உலகத்தில் மொத்த நாடுகள் 124. இன்று உலகத்தின் மொத்த நாடுகள் 196. இந்த அதிகரிப்பு... புதிது புதிதாக நாடுகள் முளைத்ததால் வந்ததல்ல... ஒரு நாட்டுக்குள்ளே ஒட்டிக் கிடந்த; சிறைப்பட்டுக் கிடந்த நாடுகள் கால ஓட்டத்தில் கட்டறுத்துக் கொண்டு விட்டு விலகி வெளியேறி வந்திருக்கின்றன. அவ்வளவுதான்!
அண்டை நாடுகள் பலவோடு நமக்குச் சண்டை அவ்வளவாக இல்லை. ஆனால் அண்டை மாநிலங்களோடு சண்டை இருக்கிறது! உறவும் இல்லை, ஒற்றுமை உணர்வும் இல்லை. சிந்து நதி பாய்கிற பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தானில் இருக்கிறது! பாகிஸ்தானோடு நதி நீர் தொடர்பாக சண்டை இல்லை.  கங்கை சென்று பாய்ந்து திரும்புகிற வங்கதேசத்தோடும் நதி நீர் தொடர்பான வம்பும் இல்லை; வழக்கும் இல்லை.
ஆனால்... இந்தியா எனது தாய்நாடு, நான் இந்தியன் நாமெல்லோரும் இந்தியர்கள் ... ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ... என்று ஒப்புக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் இந்தியாவில், தமிழ்நாட்டோடு கேரளாவுக்குரிய நதிநீர் பிரிவினை ஓயாத சண்டை!
கன்னடத்துக்கும் அதே மனப்பான்மை. காவிரியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விடமாட்டோம் என்கிறது கர்நாடகம். உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தீராத வழக்குகளாக நிற்கின்றன.
இப்போது ஏதோ இரண்டு நாட்டு எல்லைகளில் அந்தந்த நாட்டின் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதைப் போல... முல்லைப் பெரியாறுக்கு முறையான தீர்வு வராததால், தமிழ்நாட்டின் ஆண்மையுள்ள முதலமைச்சர் மத்திய அரசிடம், ‘துணை ராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு தராவிட்டால், நாம் தமிழ்நாட்டின் காவல்துறையை அனுப்பி வைக்கவேண்டியிருக்கும்’ என்று எச்சரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது! (நல்லவேளை கருணாநிதி வீட்டுக்குப் போய்விட்டார்.)
இந்தியாவின் ஒருமைப்பாட்டின் இலட்சணம் இப்படி! ஒற்றுமையின் இலட்சணம் இப்படி!
ஒருகாலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் ஒரு குடைக்குள் வைத்து ஆண்ட காங்கிரஸ்... தனக்குத் தானே சவக்குழி வெட்டிக் கொண்டிருக்கிறது!
அநேகமாக விரைவில் இறுதி மரியாதை செலுத்த வேண்டியிருக்கும்.
பா.ஜ.க.வும் மூன்றில் ஒரு பகுதி இடத்தைப் பிடிப்பதே குதிரைக்கொம்பாகத்தான் இருக்கப் போகிறது!’
இந்தியா என்பது ஒரு கதம்ப மாலை!
இந்த கதம்ப மாலையில் ஒரேவிதமான மலர்களும் இல்லை, ஒரே விதமான வண்ணமும் இல்லை. ஒரே வகையான வாசமும் இல்லை. எல்லாமே ஒன்றுகொன்று வேறானது!
இந்தியா ஒரு தேசமல்ல என்பதற்கு இனி போய் வேறு வேறு ஆதாரங்களைத்தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
ஈழத்தில் நான்காவது ஈழப் போரில் ஒன்றரை லட்சம் உயிர்களைப் பறித்தெடுத்ததில், இலங்கைக்கு இருக்கும் பங்கைக் காட்டிலும் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களை வள்ளுவர் சொன்னதுபோல்,  தலையின் இழிந்த மயிர்களாகக் கூட இந்திய அரசு மதிக்கவே இல்லை.
இந்தியா என்ற ஒரு தேசத்தில் இருக்கும் ஒரு பகுதி மக்கள், தென்பகுதி மக்கள், தமிழ் மக்கள்...
ஈழப் படுகொலைக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்... கதறுகிறார்கள்...  மறியலில் ஈடுபடுகிறார்கள்... தீக்குளித்துச் சாகிறார்கள்... தெருத்தெருவாக ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்!
இந்தக் கொதிப்பும் இந்தத் துடிப்பும் தமிழ்நாட்டைத் தவிர எந்த மாநிலத்திலும் இல்லாமல் போனதே என்ன காரணம்? பம்பாயிலே பத்து பேரைக் கொன்றுவிட்டால் கொதிக்கிறவர்கள், துடிக்கிறவர்கள்;
பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.
நம் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டபோது
சில்லிட்டு உறைந்து கிடக்கும் சவத்தைப் போல இருந்தார்களே...
என்ன காரணம்?
நமக்கு அவர்கள் அன்னியர்கள்... அவர்கள் இரத்தம் வேறு. நம் இரத்தம் வேறு! அவர்கள் இனம் வேறு;
நம் இனம் வேறு! அவர்களின் மனம், குணம் வேறு வேறு;
நமது மனம், குணம் வேறு வேறு! பாலஸ்தீனத்துக்காக பரிந்து பேசியவர்கள்,
பக்கத்தில் இருக்கும் நமது மக்களின் விடுதலையை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல...
திட்டமிட்டு தடுத்து முடித்தார்கள்!
இந்த இந்தியா என்றுமே தமிழருக்கு பகையானது... எதிரானது!
தமிழ் ஈழத்துக்கு இந்தியா என்றும் எதிராகத்தான் இருக்கும் என்பதை மற்றவர்கள் எவரும் புரிந்துகொள்ளாமல், தெரிந்துகொள்ளாமல் இருந்த முப்பது ஆண்டுகளுக்கு மிக முன்னரே...
தம்பி பிரபாகரன் துல்லியமாக புரிந்து வைத்திருந்தார்.
என்றைக்கு இருந்தாலும் இந்திய நாகம் ஈழத்தின் மேல்தான் சீறும்... ஈழ மக்களின் உயிரைத்தான் குடிக்கும் என்பதில் தம்பிக்கு மிகச் சிறந்த தீர்க்க தரிசனம் அப்போதே இருந்தது.
யுத்த நடவடிக்கைகளில்  அவன் ஒரு விஞ்ஞானி
விடுதலைத் தத்துவத்தை தீர்மானிப்பதில் மிகச் சிறந்த ஞானி.
இந்தியாவைப் பற்றிய தம்பியின் கருத்தோட்டத்தை கணிப்பை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துதான் வைத்திருந்தேன்.
மற்ற ஈழப் போராளிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்களுக்கு இந்தியாவின் மீது இருந்த மூடநம்பிக்கை தம்பிக்கு இருக்கவே இல்லை! இந்திரா காந்தி ஈழ விடுதலைப் போராளிகளுக்கு படைக்கலம் கொடுத்ததும் பயிற்சி அளித்ததும் ஒரு நல்ல நாடகம் என்பதை அவர் சரியாக கணித்து வைத்திருந்தார்.
இது ஜெயவர்த்தனேவுக்கு எதிரானதே தவிர தமிழ் ஈழத்துக்கு ஆதரவானது அல்ல என்பதை அவர் திட்டவட்டமாக முடிவு செய்திருந்தார்.
“இரைபோடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே...
இதுதான் உலகம் வீண்.. அனுதாபம் கண்டு நீ
ஒருபோதும் நம்பிடாதே...”-
என்று பட்டுக்கோட்டையின் பாட்டுக்கான விளக்கம்தான்
தமிழ் ஈழப் போராளிகளுக்காக ஆதரவு தந்த கதையும் என்பதை ஐயத்துக்கு இடமில்லாமல் தம்பி மட்டும்தான் தெரிந்துவைத்திருந்தார்.
இந்தியா நம்மை அழித்தாலும் அதை எதிர்க்கவேண்டிய நிலைமை நமக்கு வரும் என்பது அவருக்குத் துல்லியமாக விளங்கிப் போயிருந்தது. இந்த மனப்பான்மை அவர் மனத்தின் அடித்தளத்தில் இருப்பதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக நான் புரிந்துகொண்டேன்
அந்த நிகழ்ச்சி..!
 

No comments:

Post a Comment

Thank You...