Thursday, 24 May 2012

உன் மேல் கொண்ட காதலினால் உன் விருப்பங்கள் யாவும் என்னுடயதாகி விட்டன....

நீ என் தோள்மீது
சாய்ந்து கொள்ள கேட்டாய்...
என் தோளே நீ
சாய்ந்து கொள்ளத்தான் என்று
உனக்கு தெரியாதா....

********************************************
உன் மேல் கொண்ட காதலினால்
உன் விருப்பங்கள் யாவும்
என்னுடயதாகி விட்டன....

********************************************
நிலவின் அழகில் பிரம்மித்திருக்கிறேன்
உன்னை காணும் வரை...
நிலவுக்கு செல்ல ஆசைபட்டிருக்கிறேன்
நிலா மகளாய் நீ வரும்வரை....

*********************************************
நாம் காதலிக்க ஆரம்பித்தப் பின்
என்னை தவிர வேறு
ஒருவரையும் பார்க்க
பிடிப்பதில்லை என்றாய்...
எனக்கோ பார்ப்பதற்கு
என்னையே பிடிப்பதில்லை
உன்னை தவிர....

********************************************
மீண்டும் வரும் என் பிறந்தநாளை
எதிர்நோக்கி ஆவலுடன்
காத்திருக்கிறேன் ...
நீ எனக்கு கூறும்
அந்த நள்ளிரவு
வாழ்த்து செய்திக்காக....

**********************************

ப்ரியங்களுடன்   Alex
 

No comments:

Post a Comment

Thank You...