ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
சோலை எல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு .. பாவி மகன் உன் நினைப்பு ..
வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்கு
விதவிதமா பீடி கட்டாம் .. வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன் ..
சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வாரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன் நான் பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே ..
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன் (௨)
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில ..
களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே
சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் ..
வம்பு பண்ண காத்திருக்கான்
என்ன செய்ய போறனோ .. எது செய்ய போறனோ
நம் கதிய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க
சதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
சதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே செருவேன்னு துண்டு போட்டு தாண்டினியே ..
அந்த வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..
வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..
***********************************************************************************
எத்தனை அர்த்தமுள்ள பாடல்..
ஏதோ சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கும் மனதில் திடீரென்று சிக்கி தவித்து கொண்டது இந்த பாடல்..
ஒரு இழை சோகம் இதனோடு ஒட்டி இருக்கும் .. இருந்தாலும் இதமளிக்கும் ..
என்னுடைய சமுதாய பணியில் பல கலைக் குழுக்களில் சென்று அரங்கேற்றும் பாடல் களில் இந்த பாடலும் ஒன்று..
இது போன்ற பாடல்கள் இன்னும் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன் .. விரைவில்..
No comments:
Post a Comment
Thank You...