சாலையின் இருபுறமும்
நட்ட செடிகள்
வருடங்களில்
மரங்கள் ஆனது...
அனைவருக்கும்
நிழல் குடையாய்...
பறவைகள் வசிக்கும்
சரணாலயமாய் மாறின...
காற்றுக்கும் பஞ்சமில்லை...
வாகன நெரிசலை தவிர்க்க...
சாலையை அகலப்படுத்தும்
பணிக்காக வெட்டி சாய்த்தார்கள்
உயிருள்ள மரங்களை...
இதயம் கனத்தது...
விறகாகிபோன
மரங்களை பார்த்து....
No comments:
Post a Comment
Thank You...