Monday 10 September 2012

வீட்டு விலங்குகளுக்கும் நடுக்கல்
------------------------------------------------

பண்டைத்தமிழரின் மாவீரத்தைக் காட்டும் பல நடுகற்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மகேந்திரவர்மனின் ஆட்

சியின் போது இறந்த வீரனின் நடுகல். வீரன் ஏன் இறந்தான் என்பதையும் அவனைக்காத்து நின்ற அவனது நாயின் வீரத்தையும் சொல்கிறது.

பொற்றொக்கையார் என்பவளின் இளைய மகன் எருமைகளைக் காத்து நின்றபோது கள்வர்களால் இறந்தான். இவனது நாய் இரு கள்வரைக் கடித்து அவனருகே காவல் காத்து நின்றது. அந்த நன்றியுள்ள நாயின் உருவமும் அந்நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது நடந்து ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. நடுகல் வீரனின் தாய் பொற்றொக்கையாரின் பெயரைப் பொறித்ததால் அந்நாளில் தமிழர் பெண்களின் வாழ்வுரிமையைப் போற்றினர் என்பதையும் காட்டுகிறது.

No comments:

Post a Comment

Thank You...