Friday, 14 September 2012

பார்வையில்லாத பெண் நாய்க்கு வழிகாட்டியான ஆண் நாய் #நேசம்



பார்வையில்லாத பெண் நாய்க்கு ஆண் நாய் வழிகாட்டியானது. அனாதையாக விடப்பட்ட 2 நாய்களையும் ஒரு இங்கிலாந்து தம்பதியர் தத்தெடுத்துக் கொண்டனர்.

இங்கிலாந்தில் ஷெர்வெஸ்பெரி என்ற இடத்தில் உள்ளது நாய்கள் அறக்கட்டளை மையம். இங்கு லில்லி(6), மாடிஸன் (7) என்ற 2 நாய்களை ஒரு குடும்பத்தினர் அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதில் லில்லிக்கு கண் இமைகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து கண்களை மூடிக்கொண்டது. இதனால் அதன் பார்வை பறிபோனது. சிறுவயது முதலே தன்னுடன் வளர்ந்த லில்லிக்கு உற்ற துணையாக மாறியது மாடிஸன்.

எங்கு சென்றாலும் லில்லியை தன்னுடனே அழைத்து சென்று வழிகாட்டியாக இருந்தது. லில்லியும் மாடிஸனை உரசியபடியே அதுபோகும் இடமெல்லாம் சென்று ஜாலியாக பொழுதை கழித்தது. இணைபிரியாத இந்த நாய் ஜோடிகள் பற்றிய உருக்கமான கட்டுரை இங்கிலாந்தில் உள்ள பத்திரிகை ஒன்றில் பிரசுரம் ஆனது. அதைப்பார்த்த ஆனி வில்லியம் (52), லென் (53) தம்பதி அந்த நாய்களின் பரிதாப நிலையை அறிந்து வருந்தினர். அவை இரண்டையும் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். முறைப்படி நாய்கள் அறக்கட்டளை மையத்தை அணுகி இரு நாய்களையும் தத்தெடுத்தனர்.

ஏற்கனவே அவர்கள் தங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகள் வளர்த்து வந்தனர். அவைகளை 5 மாதத்துக்கு முன்பு அவர்களது மகள் வெளியூர் சென்றபோது தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இதனால் வீடு வெறிச்சோடியது. அந்த நாய்களின் இடத்தை தற்போது இவை இரண்டும் பிடித்துக்கொண்டன. லில்லி, மாடிஸன் இரண்டு நாய்களும் பணக்கார வீட்டு செல்லக்குட்டிகளாகி விட்டதுடன் தற்போது ஹாலிடே டூராக பிரான்சுக்கு பறந்துள்ளன.

* இனி மிருகங்களை பார்த்தாவது மனிதாபிமானத்தை கற்றுகொள்ளட்டும் #மனிதமிருகங்கள்

No comments:

Post a Comment

Thank You...