Sunday, 9 September 2012

பிரதமருக்கு மொத்தம் சொத்து பத்தேமுக்கால் கோடி என்றும் ஒரே ஒரு மாருதி கார் மட்டும் சொந்தமாக உள்ளது என்றும் தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார். கேபினட் அமைச்சர்கள் சிலரின் சொத்துமதிப்பை காட்டிலும் இது குறைவு தான் என்றாலும் ஒரே ஆண்டில் இவரது சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பிரதமரின் சொத்துவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் தனக்கு சொந்தமாக வீடும் மாருதி 800 காரும் உள்ளது எனவும் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 .73 கோடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

150 கிராம் தங்க நகைகள் உள்ளன:

பிரதமருக்கு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஒரு பிளாட், டில்லியில் ஒரு பிளாட் என இரு பிளாட்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 7.27 கோடி, பல்வேறு கிளைகளில் உள்ள ஸ்டேட் வங்கிகளில் மொத்த கையிருப்பாக ரூ.3.46 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தவிர 150 கிராம் தங்க நகைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு 2.75 லட்சம் , தனக்கு சொந்தமாக ஒரே ஒரு மாருதி 800 கார் உள்ளது.இதன் மதிப்பு ரூ. 21 ஆயிரம் எனவும் மொத்தமாக தனது சொத்து மதிப்பு ரூ. 10 கோடியே 73லட்சத்து88 ஆயிரத்து 730 . 81 பைசா எனவும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு பிரதமரின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடியே 11 லட்சமாக இருந்தது ஒரே ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக பிரபுல்பட்டேல் சொத்து :

தவிர இவரதுஅமைச்சரவையில் உள்ள சில கேபினட் அமைச்சர்களில் அதிகபட்சமாக பிரபுல்பட்டேல் சொத்துமதிப்பு ரூ. 52 கோடி எனவும், கபில்சிபலுக்கு ரூ. 37 கோடி எனவும், சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.22 கோடி , ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ. 11.92 கோடி , அழகிரியின் சொத்து மதிப்பு ரூ. 9.50 கோடி எனவும் அந்த இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறைந்த சொத்து மதிப்பு உள்ள கேபினட் அமைச்சர்களில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 55 லட்சமாகும். நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் பிரதமர் தலை உருளும் இந்த நேரத்தில் இவரது சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Thank You...