6 மாதங்களுக்கும் மேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் மிகவும் குறைவு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று,
ஒரு புது செய்தி...
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் 56000 தாய்மார்களிடம் ஆய்வ

ு
ஒன்றை நடத்தியது. 6 மாதங்களுக்கும் அதிகமாக தாய்ப்பால் கொடுத்த
பெண்களுக்கு எதிர்காலத்தில் ரத்த அழுத்த பிரச்னைகள் மிகவும் குறைவாகவே
வருகிறதாம். அது மட்டுமல்ல... அதிகம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்
பருமன் பிரச்னையில் சிக்குவதில்லை. காது, தொண்டை, ஆஸ்துமா நோய்களும்
எளிதில் அண்டுவதில்லை. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகம் உண்டாகிறது.
முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் உள்ள பாசப்பிணைப்பு அதிகமாகிறது.
ஆக, தாய்க்கும் சேய்க்கும் வாழ்நாள் முழுமைக்கும் நலம் பல தரும் விஷயங்கள் தாய்ப்பாலில் இருக்க செயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டி தாய்ப்பால் மறுப்பது முறையாகுமா? தாய்ப்பாலை சேய்களுக்கு மறுத்திடும் நிலை அதிகரிக்குமானால் மழலைகள் விலங்குகளின் குட்டிகளை ஏக்கத்துடன் பார்த்து ஏங்கிடும் நிலை உருவாகிவிடும். எந்த ஒரு செயற்கை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது. தாய்ப்பால் மறுத்தல் என்பது நம் நாட்டை பொறுத்த வரையில் எங்கோ ஒன்றாகத்தான் இருக்கும் என நம்புவோம்,அத்தகு எதிர்மறையான எண்ணம் எல்லா பெண்களிடத்தும் சென்று அடையும் முன் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

No comments:
Post a Comment
Thank You...