உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை
அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும்
நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய
ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்
“”நெருநல
்
உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி
சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி
விட்டார் ”நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே
பெருமை” என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த
அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின்
பிரிவைத் தாளாமல்,
“”அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு”
என்று ஒரு நாலுவரி பாட்டெழுதினார்.
”அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே!
என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே!
என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!” என்பது பாட்டின்
உருக்கமான பொருள். இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட, நீதிமன்ற
வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா?!
“”அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு”
என்று ஒரு நாலுவரி பாட்டெழுதினார்.
”அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!” என்பது பாட்டின் உருக்கமான பொருள். இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட, நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா?!
No comments:
Post a Comment
Thank You...