Sunday, 16 September 2012

அன்புள்ள தோழி!!!



அடுத்த பிறவிலும் நீ வேண்டும்

காலையில் அம்மா

இரவில் காதலி

மாலையில் நண்பர்கள்

தொலைவில் உறவினர்கள்

ஆயிரம்பேருக்காக நான் வாழ
எனக்காக ஒருத்தி

தொப்புள் கொடி
உறவும் இல்லை
எதுவும் இல்லை

சரசம் இல்லைகளவும் இல்லை

மரியாதையை இல்லை
மயக்கம் இல்லை

என் மௌன
மொழிகளை புரிந்தவள்

எந்தன் கோபத்தை
சிரித்து ரசித்தவள்

நான் நேசிப்பவளை
அடையாளம் காட்ட
என் சுவாச
மூச்சாய் ஒருத்தி,

இறுதிவரை என்னுடன்
தோழியாக!!!

No comments:

Post a Comment

Thank You...