Monday, 10 September 2012

நற்றமிழ்நாடு..!




அன்று..!
விவசாயமும்
விவசாயம் சார்ந்த
இடமும்..

இன்று..?

நிலம் பார்த்து நின்ற
நாற்றங்கால்களுக்கு மாற்றாய்,
வானம் பார்த்து நிற்கும்
அடுக்கு மாடி குடியிருப்புகள்..!

அணில்கள் ஓடிப்பிடித்தாடும்
மரங்களை மொட்டையாக்கி
வளர்ந்து நிற்கும்
மதில் சுவர்..!

கிணற்றைச் சமாதியாக்கி
எழுந்து நிற்கும்
செயற்கை நீரூற்று..!

வரப்புகளாய் வரிசைகட்டி
ஒதுங்கி நிற்கும்
செடி கொடிகள்..!

தனது பாதை பழுதாகியதால்,
நுழைய முடியாமல் நிற்கும்
வருடாந்திரப் பருவக் காற்று..!

புழுக்கையிடும் ஆடும்
சாணமிடும் மாடும்
மேய்ந்த இடத்தில்
ஓய்வாய் நிற்கும்
புகையைக் கக்கும் வாகனங்கள்..!

தானியத்தைத் தேடிவந்து
ஏமாற்றத்துடன் நிற்கும்
பறவை இனங்கள்..!

திருஷ்டி பொம்மையாய்
அலங்கரித்து நிற்கும்
சோளக்காட்டு பொம்மை..!

விலை நிலமாகிப் போன
விளை நிலத்தை...
ஏக்கப் பார்வை பார்த்தபடி
'செக்யூரிட்டியாய்' நிற்கும்
முன்னால் விவசாயி..!
-Muruganandam Thangavel-

No comments:

Post a Comment

Thank You...