தோன்றலும், தொலைதலும், தேடலும்,
தொடர்கின்ற உலக வாழ்வில்,
நான் என்றும் ஓர் மாணவனாக..!
"அ, ஆ" போடவும்,
அறிவினை பெருக்கவும்
ஒழுக்கத்தை உயிராய்
மதிக்கவும் வைத்த - எனது
அன்பு மிகு ஆசான்கள்
எபோதும் என் நெஞ்சம் தன்னில்..!
கதிரவனாய்
கடமையில் முழு மனம் கொண்டு,
தாயாய் அன்பை தந்து,
கல்வி பெற வழி விரித்து
விரைந்து முன் நடந்தீர்
ஒளியாய்..!
கலைகளின் உருவாய் நின்று,
கவிதையாய் வாழ்வை வென்று,
கரைந்தோடும் காலத்தில்
கரையாது நிஜமாய் நின்றீர்..!
என் இதயத்தில்
மாறாத நினைவாகி,
உயர்ந்து நிற்கின்றீர்
தெய்வமாக...!
-சுதாகரி மணிவண்ணன்-
No comments:
Post a Comment
Thank You...