Saturday, 8 September 2012

என் சுவாசமே
நினையாத நேரத்தில் நீயாக வந்தாய்
உயிராக மாறினாய்
சுவாசமாய் மாறினாய்
நீயின்றி வாழ்வில்லை

நீயின்றி சுவாசமில்லை
என்றானாய்
கனவிலும் நீயே
என் நனவிலும் நீயே
நீயின்றி நானே இல்லை என்றாக்கினாய்
இன்றோ நீயும் இல்லை
உன் நினைவும் இல்லை
என் அழகும் இல்லை
உன்னை எண்ணி உன்னை எண்ணி
என்னை மறந்து எல்லாம் இழந்து
பிணமாய் நடந்து கொண்டிருக்கிறேன்
வருவாயா....??
வந்தாலும் உதவியில்லை
பிணத்திற்கு உயிர் கொடுக்க முடியாதல்லவா

No comments:

Post a Comment

Thank You...