Friday, 15 June 2012

பெண்கள் வாழத் தகுதியான நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்த இடம்?


PDF அச்சிடுக மின்-அஞ்சல்

ஜி 20 நாடுகளில் உள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், ஆண்-பெண் இன வேறுபாட்டைக் களையும் அரசின் கொள்கைகள், வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் போன்றவற்றால் கனடா பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் இடத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் திருமணம், அடிமைத்தனம் ஆகியவற்றால் இந்திய மிக மோசமான நாடாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வாகனம் ஓட்டத் தடை, 2011ம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது ஆகியவற்றால் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சௌதி அரேபியாவும், அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்கும் நடைமுறை, 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம், வரதட்சணைக் கொடுமையால் உயிரோடு எரிக்கப்படும் பெண்கள், வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாவது போன்ற காரணங்களால் இந்தியா பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment

Thank You...