Friday, 15 June 2012

திரு . அப்துல் கலாம்

இந்திய பாதுகாப்பை பலப்படுத்தியவர் ,
விண்வெளியை அருகில் கொண்டு வந்தவர்
- இப்படி புகழப்படும் திரு . அப்துல் கலாம் அவர்கள் எவ்வாறு தமிழனின் பெருமை என எனக்குப் புரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ராமேசுவரத்திலுள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியின் அவல நிலையை , தன் ஊருக்காக எந்த நல்லதும் செய்யாத அப்துல் கலாமை பற்றி ஒரு தனியார் தொலைகாட்சியில் புட்டு புட்டு வைத்தார்கள்.

அவர் சனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழக மீனவர் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டதா என்றால் அதுவும் இல்லை ...

எனது பள்ளி , கல்லூரி பருவங்களில் வண்டியில் அவரது முகத்தினை ஒட்டி உலகை வலம் வந்த அவரின் உண்மை முகம் பல விடயங்களில் தோலுரிக்கப்பட்டது வேதனை :(


கூடங்குளம் பிரச்சனையின் போது ஒரு விஞ்ஞானியாக தனது கடமையை , தேசக்கடனை செய்ய மறந்தவர் கலாம் .
அணு உலையின் ஆற்றலையும் , பாதுகாப்பையும் விளக்க வேண்டியவர் , அரசாங்கம் தரும் சலுகைகளையும் , அரசு செய்ய வேண்டிய சமாதானத்தையும் , நாட்டிற்கு வரப்போகும் முன்னேற்றத்தையும் கனவாக காட்டி சப்பைக்கட்டு கட்டியது உச்சக்கட்ட கொடுமை . நடுவண் அரசு தமிழர்களின் பிரச்சனையை சமாளிக்க அனுப்பிய ' அக்கினி ' ஏவுகணை தான் அப்துல் கலாம் அவர்கள் .

ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் அப்துல் கலாம் சிறந்த தன்முனைப்பாற்றல் பேச்சாளர் என்னும் மாயையை , சாமானியத்தன பொதுப் பேச்சில் சிக்குவேமேயானால் சிறந்த முட்டாள்தனம் வேறில்லை .

அப்துல் கலாம் சிறந்தவர் என்றால் அவரை கடந்த சனாதிபதி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட கேப்டன் லட்சுமி எவ்வகையில் குறைந்தவர் . நாட்டு விடுதலைக்காக இந்திய விடுதலைப்படையில் நேதாஜியுடன் இணைந்து களம் கண்ட வீராங்கனை கலாமுக்கு எவ்வகையில் தாழ்ந்தவர் ?????????

ஆனால் , சனாதிபதி வேட்பாளர்களில் இருக்கும் மற்றவர்களுக்கு அப்துல் கலாம் அவர்கள் எவ்வளவோ தேவலாம் என்பதே என் கருத்து .

அரசின் கைப்பாவை , பொம்மை அரசாங்கத்தினை மட்டுமே அப்துல் கலாம் அவர்களால் தர முடியுமென்பது தீர்க்கமான கருத்து . உதாரணம் தேவைப்படின் அவரது முந்தைய ஆட்சிக்கால சாதனைகளை பார்க்கலாம் . இந்தியாவில் சனாதிபதி பதவியென்பதே பொம்மை எனப்படும்போது , இப்படியொரு கைப்பாவை சனாதிபதி நமக்கு தேவையா என்பதை நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் .

கனவு காண சொல்ல மட்டுமே தகுதி வாய்ந்தவர் கலாம் .

பேஸ்புக்கில் உடனே நிலவும் எனக்கு அப்துல் கலாமுக்கும் ஏதோ வாய்க்கா தகராறு என்பது போன்ற கருத்துக்களினால் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் ' எனக்கும் அப்துல் கலாம் அவர்களுக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை '

கையாலாகாத அப்துல் கலாமை நம்பி சனாதிபதியாக தேர்ந்தெடுப்பதும் , அவருக்காக பரப்புரை செய்வதுமே சிறந்த கோமாளித்தனமாக இருக்க முடியும் !!!

இயக்கம் சார்ந்த சுட்டிகள் இவையெனினும் , சில உண்மைகளை உங்கள் சிந்தனைகளுக்கு

http://rsyf.wordpress.com/2011/11/08/komali-kalam-2/

“அணு உலை விபத்தை காரணம் காட்டி அதனை கட்டாமல் இருப்பது என்பது விபத்தை காரணம் காட்டி கார் ஓட்டாமல் இருப்பது போல” என்று பேசிய கோமாளி கலாமை எதிர்த்து ஒரு பேராசிரியரின் கண்டனம் இதோ

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=439071&SectionID=130&MainSectionID=130&SEO&Title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .

No comments:

Post a Comment

Thank You...