ஊற்றிய குருதியை
உருட்டிப் போன
மழைநீரின் நிறம் ஒரு கீற்று!
எம்குலப் பெண்களுக்குப்
போர்த்தி விட்ட
கைம்மைத் துணியின் நிறம் ஒரு கீற்று!
எம்மண் எங்கும்
பரவிக் கிடக்கும்
கருவேல மரத்தின்
செழுச்சி நிறம் ஒரு கீற்று!
மூளி கை வரைந்த மூவண்ணம்
பாழுங் குழியில் போகாமல்
தாழுந் தமிழே மீளாது,
நாளுந் தமிழா நீஎண்ணு!
No comments:
Post a Comment
Thank You...