நமது ஜனாதிபதியால் யாருக்காவது, எந்த பயனும் இருப்பதாக, இதுவரை யாரும் இதுவரை சொன்னதில்லை. அப்படியான நிலையில், அவரால் தமிழகத்துக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என விஜயகாந் கூறுவது தமாஷாக உள்ளது. விஜயகாந்தின் கூற்றைப் பார்த்தால், வேறு யாருக்கோ அவரால் (ஜனாதிபதியால்) ஏதோ பலன் கிடைக்கப் போகிறது என்பது போலல்லவா சவுன்ட் பண்ணுகிறது?
ஜனாதிபதியால், ஜனாதிபதிக்கு மட்டுமே பயன் என்பதே, இதுவரை நடைமுறை.
சரி. நம்ம கேப்டன் என்னதான் சொல்ல வருகிறார்?
“காவிரியாற்றில் தண்ணீர் திறந்துவிட, கர்நாடகா மறுப்பது, 40 ஆண்டுகளாக தொடர்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை, 20 ஆண்டுகளுக்கு மேலாக தீரவில்லை. அட்டப்பாடியிலும் அணை கட்ட, கேரளா முயற்சிக்கிறது. நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரிக்கு தண்ணீர் திறந்துவிட, கேரள அரசு மறுக்கிறது.
பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிப்பதையும், தடுக்க முடியவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களும், நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. சீனர்கள் ஆட்சி நடத்தும் சிங்கப்பூரில் கூட, ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆட்சி மொழியாக, தமிழ் இன்னும் இடம் பெறவில்லை.
இதனால்,, யார் ஜனாதிபதியாக வந்தாலும், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில், கலந்துகொள்ளாமல் இருப்பதே, தமிழகத்திற்கு செய்யும் நன்மையாகும். ஆகவே, எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க, தே.மு.தி.க., தீர்மானித்துள்ளது” என்கிறது அவரது அறிக்கை.
கேப்டன் சொல்லும் விஷயங்கள் எதிலும் முடிவெடுக்க முடியாத ஒரு டம்மி பதவிதான், ஜனாதிபதி! மேலே குறிப்பிட்ட அனைத்தும், மத்திய அரசின் கைகளில் தங்கியுள்ள விவகாரங்கள். கேப்டன் புறக்கணிப்பதென்றால், லோக்சபா தேர்தலைதான் புறக்கணிக்க வேண்டியிருக்கும்!
No comments:
Post a Comment
Thank You...