Saturday, 16 June 2012

டெக்ஸாஸ் மாநிலத்தின் முக்கிய பதவியில் தமிழர் நியமனம்!


PDF அச்சிடுக மின்-அஞ்சல்
sokku-usaஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில அரசின் தொழில்முறை பொறியாளர்கள் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்க வாழ் இந்தியர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர்.
இவருடன் சேர்ந்து எட்வர்ட் சம்மர் என்பவரையும் வாரிய உறுப்பினர்களாக நியமித்து டெக்ஸாஸ் மாநில ஆளுநர் ரிக்கி பெர்ரி உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அந்த பதவியில் இருப்பார்கள்.
தகுதி வாய்ந்த பொறியாளர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது, டெக்ஸாஸ் பொறியியல் சட்டத்தை அமல்படுத்துவது, தொழில்சார் பொறியாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை ஒழுங்குமுறைபடுத்துவது போன்ற பணிகளை இந்த வாரியம் மேற்கொள்கிறது.
எஸ்என்சி-லாவலின் ஹைட்ரோ கார்பன் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக கண்ணப்பன் பணியாற்றி வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். மேலும், ஹட்சன் நகரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

No comments:

Post a Comment

Thank You...