............................................
மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையான பாடமாக சமச்சீர் கல்வி இல்லை. எளிமையாக
இருக்கிறது. தரமான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்க முடியாது, இதெல்லாம்
ஜெயலலிதா அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவினர் கொடுத்த ஊக்கத்தில்
தனியார் பள்ளி முதலாளிகளும், மேல் தட்டு வர்க்க பெற்றோர்களும் சமச்சீர்
கல்வி குறித்துச் சொன்னக் கருத்துக்கள். இதோ சமச்சீர் கல்வியில்
பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வந்து விட்டன.
முன்னெப்போதையும் விட கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில்
தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். மனப்பாடம் செய்து மாங்காய் மண்டையர்களை
உருவாக்கிக் கொண்டிருந்த நமது கல்விமுறையில் ஒரு சின்ன உடைப்பை
ஏற்படுத்தியிருக்கிறது கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம்.
மேல்தட்டு வர்க்கங்களும், தனியார் பள்ளி முதலாளிகளும் கல்வி தொடர்பாக கலர்
கலராய் சொல்லி வந்த எல்லா பொய்களையும் உடைத்திருக்கிறது தேர்வு
முடிவுகள். மேலும் மேலும் நமது கிராமப்புற தலைமுறை அறிவு பெற சமச்சீர்
கல்வியை ஆதரிப்போம்.
No comments:
Post a Comment
Thank You...