புதிதாக பாஸ்போர்ட்
புதிதாக
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போருக்கு புதிய வசதிகளை பாஸ்போர்ட் அலுவலகம்
செய்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வாய்ப்பைத் தவிர, அந்தந்த மாவட்ட
ஆட்சியர் அலுவலத்தில் விண்ணப்பிக்கும் முறை தற்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி, பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால்
சென்னை வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்றும், சென்னைவாசிகள், அண்ணாநகர்,
பூக்கடை, அடையாறு காவல்நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பாஸ்போர்ட்
துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Thank You...