Wednesday, 27 June 2012

ஏவுகணை தயாரிப்பில் சரித்திரம் படைத்தது இந்தியா!



New delhi, India: India today (Thursday) created history with the successful testing of the much awaited Agni-V long-range nuclear-capable ballistic missile that can accurately hit targets more than 5,000 km away. With this launch, India entered an exclusive club of nations that have this capability, becoming only the fourth nation in the world after US, Russia and China.

ஏவுகணை தயாரிப்பில் இன்று புதிய உயரத்தில் காலடி வைத்திருக்கிறது இந்தியா. இந்தியாவின் நீண்ட தொலைவு செல்லக்கூடிய, அணு ஆயுத பாலஸ்டிக் ஏவுகணை (long-range nuclear-capable ballistic missile) இன்று காலை 8.07-க்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ஒரிசா கடற்கரையோரம் உள்ள வீலர் தீவிலுள்ள லவுஞ்சிங் பேட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை, முழு வெற்றி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லாங்-ரேஞ்ச் ஏவுகணை இது என்று குறிப்பிட்டிருந்தோம். இதன் ரேஞ்ச் 5,000 கி.மீ. இவ்வளவு தொலைவு செல்லக் கூடிய ஏவுகணைகளை இதுவரை தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ள நாடுகள் மூன்று. அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனா ஆகியவையே அந்த மூன்று நாடுகளும். அந்த கிளப்பில் 4-வது நாடாக போய் இணைந்துள்ளது இந்தியா.
இங்குள்ள மற்றொரு சுவாரசியமான தரவு, உலக அளவில், லாங்-ரேஞ்ச் தயாரித்த மற்றைய 3 நாடுகளில் இரு நாடுகள் (ரஷ்யா, சீனா) இந்தியாவுக்க அருகே உள்ளன. இந்தியாவின் அக்னி-V ஏவுகணையின் தாக்குதல் ரேஞ்ச்சுக்குள் இந்த இரு நாடுகளும் வருகின்றன. அதாவது, இந்தியாவில் இருந்து அக்னி-V ஏவுகணையால் ரஷ்யாவையும், சீனாவையும் தாக்க முடியும்!
இன்று ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டாலும், அக்னி-V ஏவுகணையை உடனடியாக இந்திய ராணுவத்திடம் கொடுக்க மாட்டார்கள். பிரதான சோதனைக்குப் பின் செய்யப்பட வேண்டிய சில செகன்டரி டெஸ்டுகளை செய்து முடிக்க, இன்னமும் 6 மாதங்களாவது எடுக்கும். அதன்பின்னரே இந்த ஏவுகணை தாக்குதல் மேடைக்கு வரும்.
இதுவரை இந்தியா பரிசோதித்துப் பார்த்த அக்னி-1, 700 கி.மீ. தொலைவு செல்லக்கூடியது. அக்னி-2, 2,000 கி.மீ, அக்னி–3, அக்னி-4 ஆகியவை 3,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியவை. 5,000 கி.மீ. தொலைவு செல்லக்கூடிய அக்னி-5 தென் ஆசியா மற்றும் ஐரோ-ஆசியா பகுதிகளில் எவ்வளவு தொலைவுக்கு செல்லக்கூடியது என்பதை கீழேயுள்ள வரைபடத்தில் பார்க்கவும்:

No comments:

Post a Comment

Thank You...