குட்டி கதை:
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, "இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்" என்றார்.
மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்.
அதற்கு அந்த மாணவன், "இல்லை டீச்சர்
நீங்கள் மட்டும்
தனியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும்
கஷ்டமாக இருந்தது.
அதனால் தான்
துணைக்கு நானும்
நிற்கிறேன்" என்றான்.
No comments:
Post a Comment
Thank You...