விடிகிற பொழுதெல்லாம் சுகமானதாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று
உணர்த்திவிட்டு விடிந்தது இன்று. நடந்த, நடக்கப்போகும் நிகழ்வு தரும்
வேதனை, என்னை கட்டிலோடு கட்டிப்போட்டுச் சென்றது. எழுந்திருக்க சுத்தமாக
மனதில்லை. தலையணை அணைத்து தூங்குவது எப்போதுமே பிடித்த செயலாக இருந்ததில்லை
ஆனால் அது நீயென நினைக்கும் வரை.
உன்னிடம் சொல்லவே இல்லையே, என்ன நினைத்துக் கொள்வாய் என்று ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. சொல்லி மனவருத்தம் தாம் மிஞ்சும். சொல்லாமல் போனாலும் அதே தான் நடக்கும். போகட்டும் பார்க்கலாம். இப்படி தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு தான் எதையும் செய்யுறது இல்லைன்னு நீ சொன்ன வாக்கியமும் ஞாபகத்துக்கு வந்தது. இதுவும் கடந்து போகும்.
நமக்கென இருக்கும் நியாயங்கள் உலகப்போக்கோடு ஒத்துப்போவதில்லை. உலக நியாயம் சரியா என்னுடைய நியாயம் சரியா என்று விவாதம் செய்ய தயாராகவும் இல்லை. சன்னலின் துணி லேசாக விலகியது போலும். சுள்ளென்று அடித்தது வெயில் முகத்தில். மணி எப்படியும் ஏழுக்கு மேல் இருக்கும். விடியாமலே இருந்திருக்கலாம். எட்டு மணி வரைக்கும் தூக்கம். வெளங்குறதுக்கா என்ற அம்மாவின் குரல் கேட்டது. மணி அவ்ளோ ஆச்சா. முக்கிய பணிகள் எதுவும் இல்லை. உன்னை இணையத்தில் காணவில்லை இரண்டு நாட்களாக, அதுவேறு உறுத்திக் கொண்டிருந்த்து. உன் கோபம் நியாயம் தான். உன்னிடம் நான் முன்பே சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இது எனக்கு மகிழ்சியான செய்தியாக இருக்கவில்லை. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்னவென்று உனக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்திருந்தால் உன்னிடம் தான் முதலில் சொல்லி இருப்பேன்.
வாழ்க்கை அது செல்லும் போக்கிற்கு என்னைத் தரதரவென்று இழுத்து சென்று கொண்டிருந்தது. உடலெங்கும் காயங்கள், இரத்தம். இரத்தமும் மண்ணும் கலந்து புண்களை அடைக்க அதன் வலி உயிரைப் பிழிந்தது. குருதி வாசனை கண்டு மூக்கை பொத்திக் கொள்கின்றனர். ஒரு உருவம் எனக்காக ஓலமிட்டபடி என் பின்னால். அது நீயாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். கயிறுகள் இறுக்க இன்னும் வேகமாக இழுத்துசெல்லப்பட்டேன். அடிக்கடி வரும் இந்தக் கனவு இன்றும் வந்தது.
மறுபடியும் விடியல். மறுபடியும் ஒரு பயணம். எழுந்திருக்க சுத்தமாக மனது இல்லை. உன் நினைவுகளைச் சுமந்தபடி உறக்கத்தை தழுவிடவே விருப்பம். விடியலே வேண்டாம். இரவே போதும்

No comments:
Post a Comment
Thank You...