Monday, 4 June 2012

மரணம்- குட்டிக் கவிதைகள்!


கொலை
ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!

அடக்கம்
அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்த
அமரரும், அமரராய் அடக்கம்!
அடக்கம் செய்யப்பட்டார்,
அமைதியாய் அமரரானார்!

காலமானார்அக்காலம், இக்காலம் எதிர்காலம்
எக்காலமாயினும்,என்றும் மாறா
'இறந்த' காலம்; ஒருவர்
போனதும் சொன்னார்- அவர்
"காலம்" ஆனார்!!

No comments:

Post a Comment

Thank You...