நான் 8th படிக்கும் போது நடந்தது. எனக்கு அது என்னமோ தெரியாது. கரண்ட் இருக்கும் போது எல்லாம் படிக்க பிடிக்காது. பவர் கட் ஆனதும் டார்ச் லைட் வச்சு படிச்சுக்கிட்டு எல்லோரையும் டார்ச்சர் பண்ணுவேன். என் அம்மா இந்த வெளிச்சத்துல எல்லாம் படிக்காத கண்ணு கெட்டுப் போயிடும்னு சொல்லுவாங்க. அதெல்லாம் முடியாது நான் படிக்கணும் இல்லனா எங்க மிஸ் திட்டுவாங்கன்னு படிப்பாளி மாதிரி ஒரு ஸீன் வுடுவுவேன்.
என் அம்மா படிக்க வேண்டாம்னு கெஞ்சுவாங்க. பரவால்ல உங்க மிஸ்ட நான் வந்து சொல்றேன்னு சொன்னாங்க. மார்க் கம்மியாகிடும் நான் படிக்கப் போறேன்னு சொல்வேன். பரவால்லன்னு என் அம்மா சொல்வாங்க. என் அப்பா இத தான நீ எதிர்பார்த்த ஒழுங்கு மரியாதையா போய் புக்க வைனு சொல்வாங்க. நானும் சரிம்மா ஆனா மார்க் கம்மியாச்சுனா எனக்கு தெரியாது அதுக்கு நீங்க தான் பொறுப்புன்னு அப்டியே பழிய தூக்கி அம்மா மேல போட்டுட்டு ஹாயா வாசல்ல வந்து உட்கார்ந்திடுவேன். இது எப்பவுமே எங்க வீட்ல அன்றாடம் நடக்கும் நிகழ்வு.
அதே மாதிரி வெளியில எங்கயாவது கிளம்பும் போதும் நான் ஸ்கூல் புக்ஸ் எடுத்துட்டுப் போவேன். என் அப்பா எதுக்குன்னு கேட்டா பஸ் கிளம்பற அந்த 2 மணி நேரத்த வேஸ்ட் பண்ணக் கூடாதுலனு சொல்லுவேன். என் அப்பாக்கு கோபம் கோபமா வரும். அதுவும் ஒரு புக்ஸ எடுத்திட்டு வர மாட்டேன் . சயின்ஸ் புக் எடுப்பேன் அப்போ திடிர்ன்னு நமக்கு ஹிஸ்ட்ரி படிக்கணும்னு ஆசை வந்தா என்ன பண்றதுன்னு ஹிஸ்ட்ரி புக்கையும் எடுப்பேன். ஒரு வேளை நமக்கு கணக்கு மேல ஆர்வம் வந்திடுச்சுன்னா என்ன பண்றதுன்னு மேக்ஸ் புக்கையும் எடுப்பேன். இப்டியே எல்லா புக்கையும் எடுத்திடுவேன். என் அப்பா கடுப்பாகி எல்லா புக்ஸையும் வக்கிரியா என்னன்னு சத்தம் போடுவாங்க. நான் எல்லா புக்ஸையும் அப்பா முன்னாடி வச்சிட்டு எதாவது ஒரு புக்க அப்பாக்கு தெரியாம பேக்ல ஒளிச்சு வச்சுடுவேன். அப்றம் பஸ்ல போகும் போது அந்த புக்க எடுத்து வச்சு ரொம்ப சீரியஸாப் படிப்பேன். இதுவும் எங்க வீட்ல வழக்கமா நடக்குற ஒன்னு. நான் பஸ்ல படிக்கறத பார்த்திட்டு அங்க இருக்கற பேரண்ட்ஸ் எல்லாம் அவங்க பிள்ளைங்ககிட்ட அந்த பொண்ணப் பாரு பஸ்ல கூட டைம் வேஸ்ட் பண்ணாம படிக்குது நீயும் தான் இருக்கியேன்னு திட்டிட்டுப் போவாங்க. என் அப்பா அப்பவும் இத தான நீ எதிர் பார்த்த இப்பயாவது அந்த புக்க மூடி வைன்னு சொல்லுவாங்க.
அப்டி தான் ஒரு நாள் பஸ்ல கிளம்பி ஒரு ஹாஸ்பிட்டலுக்குப் போனோம். அங்க உட்கார்ந்திருக்கும் போது டைம் வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு நானும் மேக்ஸ் புக்க எடுத்து கணக்கு போட்டுக்கிட்டு இருந்தேன். போற வர்றவங்க எல்லாம் பாரு அந்தப் பொண்ண எப்டி படிக்கிதுன்னு சொல்லிட்டே போனாங்க. நானும் அதெல்லாம் கேட்டுக்கிட்டே மேக்ஸ் போட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு ஒரு அம்மா என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாங்க. என்னமா பண்றன்னு கேட்டாங்க. நானும் மேக்ஸ் போடுறேன் ஆன்டினு சொன்னேன். என்ன கிளாஸ் படிக்கறன்னு கேட்டாங்க சொன்னேன். ஓ அப்டியா நானும் மேக்ஸ் டீச்சர் தான்னு திடீர்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. நான் அதக் கேட்டு அதிச்சியாகி மேக்ஸ் புக்க வச்சிட்டு சயன்ஸ் புக்க எடுக்கலாம்னு டிரை பண்ணேன். அதுக்குள்ள அவங்க புக்க கொடும்மான்னு வாங்கிக்கிட்டாங்க. சரி நான் ஒரு கணக்கு போடுறேன் நீ செய்றியானு கேட்டாங்க.என் அப்பாவுக்கு ஒரே சந்தோஸம். நான் மாட்டிக்கிட்டதுல. நானும் வேற வழி இல்லாம சரின்னு சொன்னேன். அப்டியே என் அம்மாகிட்ட இந்த கணக்க உங்க பொண்ணு போடுறத வச்சே 10thல என்ன மார்க் எடுக்கும்னு சொல்லிடுவேன்னு சொல்லி ஒரு 10 கணக்கு போட்டாங்க. நானும் யோசிச்சு யோசிச்சு ஒரு 2 மணி நேரம் உட்கார்ந்து செய்து முடிச்சேன். உங்க பொண்ணு சுமாரா தான் மார்க் எடுக்கும்னு சொல்லுட்டாங்க.
No comments:
Post a Comment
Thank You...